அதிமுக மட்டுமல்ல திமுகவினரும் விரட்டியடிப்பு - கே.என்.நேரு மீது தண்ணீர் பாக்கெட் வீச்சு

 
Published : Jan 18, 2017, 02:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
அதிமுக மட்டுமல்ல திமுகவினரும் விரட்டியடிப்பு - கே.என்.நேரு மீது தண்ணீர் பாக்கெட் வீச்சு

சுருக்கம்

ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் கோபம் மத்திய அரசின் மீதும் மாநில அரசின் மீது மட்டுமல்ல திமுகவினர் மீதும் திரும்பியுள்ளது. போராட்ட களத்துக்கு அடிபொடிகளுடன் வந்த அவர்களையும் இளைஞர்கள் விரட்டி அடித்தனர். கே.என்.நேரு மீது தண்ணீர் பாக்கெட்டை வீசி எரிந்து துரத்தி அடித்தனர்.

தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆனாலும், இடது சாரிகள் ஆனாலும் சடங்குபூர்வமான போராட்டம் நடத்துவது வாடிக்கையாகி விட்ட கால கட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சி மாணவர்கள் இளைஞர்களை சமூக பிரச்சனையின் பால் ஒன்றுபட்டு கொதித்தெழ வைத்துள்ளது. 

போலீசாரும் இதுவரை சாதாரண போராட்டங்களை மட்டுமே சந்தித்து வந்த நிலையில் தன்னெழுச்சியான போராட்டத்தை எனக்கென்னவென்று கைண்டு பிரச்சனையை பெரிதாக்கி விட்டனர்.

தமிழகத்தின் பண்பாடு , கலாச்சாரச்சாரம் அனைத்திற்கும் தாங்கள் மட்டுமே என்று மார்த்தட்டிகொண்டு இயக்கம் நடத்தி வந்த திமுகவினர் சமீப ஆண்டுகளில் குறிப்பாக 2 ஜி ஊழல் விவகாரத்துக்கு பின்னர் இளைய தலைமுறையினரிடமிருந்து தனிமை பட்டு போயுள்ளனர்.

அவர்களுடைய எந்த போராட்டத்தையும் இளைஞர்கள் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். திமுக என்ற பேரியக்கம்  சீமான்கள் , கோமான்கள் தலைமை தாங்கும் கட்சியாக மாறியதன் விளைவு தமிழகத்தில் வலதுசாரி சக்திகள் தலைதூக்க துவங்கின.

2014 ல் மோடி மிகப்பெரிய ஹீரோவாக இளைஞர்கள் மத்தியில் வளர்ந்தார். ஆனால் காவிரி பிரச்சனை , ரூபாய் நோட்டு விவகாரம், தற்போது அதற்கு உச்சகட்டமாக ஜல்லிக்கட்டு காரணமாக கடைகோடி குப்பை தொட்டியில் தூக்கிவைத்து கொண்டாடிய இளைஞர் பட்டாளத்தால் தூக்கி எரியப்பட்டுள்ளார்.

இளைஞர் சக்தி நவீன வசதிகளுடன் ஒன்றிணைந்துள்ளனர். ஆனால் காலத்துக்கும் பழைய சினிமா வசனத்தை பேசி மாற்றிவிடலாம் என்று இளைஞர்கள் போராட்டத்தை கையிலெடுக்க நேற்று முதல் திமுக முடிவு செய்து மாவட்டந்தோறும் தங்கள் நிர்வாகிக்கு உத்தரவிட்டுள்ளார் திமுக செயல் தலைவர் மு.கஸ்டாலின்.

ஆனால் நினைப்பதெல்லாம் நடக்குமா. இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில்  போராட்டக்காரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க தங்கள் கட்சி செயல்வீரர்கள் போர்படை தளபதிகளுடன் சென்ற திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் இளைஞர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரியில் வாழ்த்த சென்ற யானை காதில் புகுந்த எறும்பு என்று கருணாநிதியால் வர்ணிக்கப்பட்ட இ.ஜி.சுகவனம் போராட்டக்காரர்களால் விரட்டி அடிக்கப்பட்டார். இதே போல் திருச்சியில் போராட்டகாரர்களை சந்திக்க சென்ற கே.என்.நேருவை எதிர்கொண்ட இளைஞர்கள் எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துகொள்கிறோம் நீங்கள் கிளம்புங்கள் என்று வழி அனுப்பி வைத்தனர். 

அப்போது கிளம்பி சென்ற கே.என்.நேரு மீது தண்ணீர் பாக்கெட்டுகளை வீசி எரிந்து இளைஞர்கள் எதிர்ப்பை காண்பித்தனர். 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு