
இதெல்லாம் உணர்ச்சியை தூண்டும் போராட்டம் ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஏன் போராடலை , ஜல்லிக்கட்டு இல்லைன்னா செத்தா போய்டுவீங்க என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
தனியார் தொலைக்காட்சியான நியூஸ்18 விவாத நிகழ்ச்சியில் பேசிய விஜய தரணி ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து நெறியாளர் சாரதா கேட்ட கேள்விகளின் போது திடீரென கோபமடைந்தார். பின்னர் ஜல்லிக்கட்டுக்காக போராடும் லட்சக்கணக்கான இளைஞர்களை பற்றி தாறுமாறாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்.
அவரது பேச்சு அப்படியே....
பா.பிரகாஷ், ஜல்லிக்கட்டு பேரவை: அலங்கா நல்லூரில் ஐந்நூற்றுக்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் உண்ண உணவின்றி போராட்டம் நடத்தி வருகின்றனர் , அரசியல் கட்சிகள் வாக்குறுதியை ஏற்க நாங்கள் தயாராக இல்லை. 50 எம்பிக்களுடன் சென்றார்கள் என்ன நடந்தது. இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு வேண்டும். இல்லைன்னா தமிழ்நாடு தாங்காது. எந்த உத்தரவாதத்தையும் நாங்கள் ஏற்க தயாராக இல்லை. இதுவரை ஒன்றுமே நடக்கவில்லை. எங்கள் உயிர் போனாலும் நடத்துவோம்
நெறியாளர்: இவர்களின் உணர்வுகளுக்கு என்ன சொல்கிறீர்கள்
விஜயதரணி: உணர்வுன்னு சொல்ல முடியாது, சட்டம் சார்ந்த உணர்வு இருக்கணும் சும்மா பிளைண்டா இருக்க கூடாது, அது தூண்டுதல்தான்
நெறியாளர் : யாருக்கு நோக்கம் இருக்க முடியும், யாருடைய தூண்டுதல் இருக்கிறது.
விஜயதரணி: இன்றைக்கு களத்தில் போராட்டம் அது இதுன்னு சொல்றாங்க , பின்னாடி தூண்டுதல் இருப்பதாக கருதுகிறோம், நிறைய விஷயங்கள் இருக்கிறது
நெறியாளர்: திமுக காங்கிரஸ் கூட இதற்கு ஆதரவாக போராடுகிறார்கள்
விஜய தாரணி: இளைஞர்கள் விருப்பபடுகிறார்கள் மீடியா அதிகம் காண்பித்தார்கள் அதிலும் பிரபலமானது.
நெறியாளர்: இத்தனை ஆயிரம் பேர் மெரினாவில் பார்த்தோம், அதெல்லாம்
விஜயதாரணி : அதெல்லாம் பணமதிப்பிழப்பு எந்த அளவுக்கு பாதித்தது, இவங்கல்லாம் எங்கே போனார்கள் , அப்பல்லாம் இந்த இளைஞர்கள் எங்கே போனார்கள் , தூங்கிகிட்டு இருந்தார்களா? எத்தனை போராட்டம், தெருக்களில் நின்னது எத்தனை வயதானவர்கள், எத்தனை விவசாயிகள் இறந்து போனார்கள் , கஷ்டப்பட்டார்கள் ,இவர்கள் எத்தனை போராட்டம் நடத்தினார்கள்?அதுக்கெல்லாம் குரல் கொடுக்க கூடாதா?
அம்மா நீங்கள் எத்தனை போராட்டம் நடத்தினீர்கள்?
விஜயதாரணி : அவங்கல்லாம் எங்கே இருந்தாங்க? , இதை நியாபடுத்துகிற போராட்டம் எல்லாம் கிடையாது. ரெண்டு மூன்று டிஸ்ட்ரிக்ட்ல கலாச்சார பூர்வமாக நடக்க கூடியது.
நாம ஏற்றுக்கிற ஒன்று தான் அதே நேரம் இது மிகப்பெரிய ஒன்றாக அது இல்லைன்னா நாங்க செத்து போய்டுவோம் அப்படி இப்படி இதெல்லாம் சவால் விட்டுகொண்டு. இந்த உலகத்துல எவ்வளவோ நடக்குது.
சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்டுக்காக வெயிட் பண்றோம். சட்டம் இயற்றப்பட்டு அது முழுமை பெறும் அதுவரை இது போன்ற உணர்ச்சிகளை தூண்டக்கூடிய அரசியல் நடந்துக்கிட்டே இருக்கும் இது தேவை இல்லாத ஒன்று.
பிரகாஷ் விஜயதரணி: அம்மா எங்க ஜல்லிக்கட்டு உங்கள் அரசியல் போச்சா? உங்கள் அரசியலில் விளையாட்டுல இதையும் சேர்க்கிறீர்களா?
விஜய தரணி: இதெல்லாம் பேசாதீங்க, நீங்கள் முதல்ல பணமதிப்பிழப்பு விஷயத்துல என்ன போராட்டம் நடத்துனீங்க? எத்தனை வயசானவங்க பாதிக்கப்பட்டாங்க எங்க போனீங்க.
பிரகாஷ் , ஜல்லிக்கட்டு பேரவை: அம்மா நீங்க எத்தனை போராட்டம் நடத்துனீங்கம்மா?
இதற்கு விஜய தரணி பதிலளிக்கவில்லை.
கடைசியில் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ஒரு வாரத்துக்கு முன்னர் இளைஞர்கள் போராட்டத்தை விஜயதரணி கேவலமாக பேசினார். ஆனால் இன்று தமிழகம் முழுதும் தன்னெழுச்சியாக லட்சக்கணக்கில் திரண்டு தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளனர்.
https://youtu.be/qKpM8_vzgg0?t=3049
சுப்ரமணியம் சுவாமியின் பொறுக்கிகள் ஏச்சுக்கும் விஜயதரணியின் விமர்சனத்துக்கும் வித்யாசம் பெரிதாக ஒன்றுமில்லை. பணமதிப்பிழப்பில் என்ன போராடினார்கள் என்று கேட்கும் விஜய தரணி அவர் என்ன போராட்டம் நடத்தினார் , குறைந்த பட்சம் அவர் தொகுதியிலாவது போராடியுள்ளாரா என்றால் பதில் பூஜ்யம்தான்.