அக்னி சட்டிக்கு பொங்குறீங்க.. தலித்துகள் இழிவு காட்சிகளை ஏன் தவிர்க்க சொல்லல..? சீமானை டாராக்கிய வன்னியரசு.!

By Asianet TamilFirst Published Nov 18, 2021, 8:20 PM IST
Highlights

அக்னி கலசம் என்பது வன்னியர்களுக்கு உரியது என்பது உலகிற்கே தெரியும்.  அப்படி இருக்கையில் அந்த முத்திரையை ஏன் ‘ஜெய் பீம்’ படத்தில் பயன்படுத்த வேண்டும்?  அந்த முத்திரையைப் படத்தில் வைக்காமல் தவிர்த்திருக்கலாம்.

திரெளபதி,ருத்ரதாண்டவம் படங்களில் தலித்துகளை இழிவுபடுத்தும் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் என சொல்ல துணிச்சல் இல்லாமல் அக்னிச் சட்டிக்கு மட்டும் பொங்குவது என்ன உளவியல் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விசிக செய்தித் தொடர்பாளர் வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார். 

ஞானவேல் இயக்கத்திலும் சூர்யா தயாரிப்பு, நடிப்பிலும் வெளியான‘ஜெய் பீம்’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 1994-ஆம் ஆண்டில் கடலூரில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை மையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இப்படம். படம் வரவேற்பைப் பெற்றுள்ள போதிலும், உண்மையான சம்பவத்தில் ராஜ்கண்ணுவை கொடூரமாக அடித்து கொலை செய்த அந்தோணிசாமி என்ற சப் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை குருமூர்த்தி என்று மாற்றியது, வன்னியர்களின் பண்பாட்டுச் சின்னமான அக்னி கலச காலாண்டர் இடம்பெற்றது போன்றவை பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் திரண்டுள்ளனர். 

காலண்டர் காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுபோதிலும் பிரச்னை ஓயவில்லை. நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை எழுப்பி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியதும் அந்தக் கடிதத்துக்கு நடிகர் சூர்யாவின் பதில் கடிதமும் சூடானது. இந்நிலையில் நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக அறிவித்தது சர்ச்சையானது. அந்த சர்ச்சை முடிவதற்குள் சூர்யா, ஜோதிகா ஆகியோர் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்றும் வன்னியர் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பட்டது. அதற்கும் சூர்யா பதில் அனுப்பவில்லை. இதனால் பாமகவினரும் வன்னியர் அமைப்புகளும் கொந்தளித்து வருகின்றன.

இதற்கிடையே ஜெய்பீம் படம் வெளியாகி, அடுத்த ஓரிரு நாட்களிலேயே நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அப்படத்தைப் பாராட்டியும் சூர்யாவையும் வாழ்த்தியும் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், ஜெய்பீம் படத்தை வைத்து சூர்யாவைச் சுற்றி சர்ச்சைகள் சூழ்ந்த பிறகு சீமான் அமைதியாகிவிட்டார். திரைத் துறையையும் சேர்ந்த சீமான், சூர்யாவுக்கு ஆதரவுத் தெரிவிக்கவில்லை என்ற குரல்களையும் கேட்க முடிந்தது. இந்நிலையில் நீண்ட மவுனத்துக்குப் பிறகு சீமான் இன்றுதான் இதுபற்றி கருத்தைத் தெரிவித்தார்.

 “அக்னி கலசம் என்பது வன்னியர்களுக்கு உரியது என்பது உலகிற்கே தெரியும்.  அப்படி இருக்கையில் அந்த முத்திரையை ஏன் ‘ஜெய் பீம்’ படத்தில் பயன்படுத்த வேண்டும்?  அந்த முத்திரையைப் படத்தில் வைக்காமல் தவிர்த்திருக்கலாம். சூர்யாவிற்கு அன்புமணி எழுதிய கடிதத்தில் இருக்கும் வலி, உண்மைத் தன்மையை மறுக்க முடியாது.” என்று சீமான் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சீமானுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளார் வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
“திரெளபதி,ருத்ரதாண்டவம் படங்களில் தலித்துகளை இழிவுபடுத்தும் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் என சொல்ல துணிச்சல் இல்லாமல் அக்னிச் சட்டிக்கு மட்டும் பொங்குவது என்ன உளவியல்? அரச பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு படைப்பை சாதிய ரீதியாக முடக்க துடிக்கும் பாமகவோடு நிற்பது சரியாண்ணே?” என்று வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார். 
 

click me!