Jai bhim: உங்களுக்கு வந்தா ரத்தம்.. திருமாவுக்கு வந்தா தக்காளி சட்னியா.?? அன்புமணியை ஓங்கி குத்திய களஞ்சியம்.

By Ezhilarasan BabuFirst Published Nov 22, 2021, 6:46 PM IST
Highlights

அண்ணன் தொல். திருமாவளவனை இழிவு செய்து ஒரு படம் வந்தபோது அந்த படத்தை பார்த்து விட்டு நீங்களும் உங்கள் தந்தையாரும் இது மிகச் சிறந்த படம் என்று பேசினீர்களே. அப்போது உங்களுக்கு உறுத்தல் ஏற்படவில்லையா? ருத்ர தாண்டவம் படத்தை நீங்கள் கண்டிக்காதபோது,  இப்போது ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிராக பேச உங்களுக்கு தகுதி இல்லை. 

எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் நடிகர் சூர்யா ஜெய்பீம் விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவே கூடாது என இயக்குனர் களஞ்சியம் வலியுறுத்தியுள்ளார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னி கலசத்தை வைத்தது தவறு என்றும், அதற்காக நடிகர் சூர்யா அன்புமணி ராமதாசிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என  கூறியிருந்த நிலையில் தற்போது அதிலிருந்து பின் வாங்கி உள்ளார்.

ஜெய் பீம் திரைப்படம் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறதோ அதே அளவிற்கு ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டும், எதிர்க்கப்பட்டும் வருகிறது. இதுதொடர்பாக ஒருசாரார் சூர்யாவுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் பாமகவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை ஓயமாட்டோம் என அறிவித்துள்ள பாமக, 5 கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க வேண்டும் என சூர்யாவுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது.

இதேபோல் பாமகவை சேர்ந்தவர்கள், சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு என்றும், இனியும் வடமாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்களின் எந்த திரைப்படத்தையும் எந்த திரையரங்குகளிலும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் எச்சரித்து வருகின்றனர். அதேபோல் சூர்யாவுக்கு எதிராக போராட்டங்களும் ஆங்காங்கே தீவிரமடைந்து வருகிறது. இந்த விவகாரத்தில் உடனே தமிழக அரசு தலையிட வேண்டும் என நடுநிலையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து செயல்படுபவருமான களஞ்சியம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யூடியூப் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது பேசிய அவர், 

ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னி கலசம் வைக்கப்பட்டது முற்றிலும் தவறானது அது திட்டமிட்டு வைக்கப்பட்டதாக கருதுகிறேன், இந்த செயலுக்கு நடிகர் சூர்யா வருத்தம் தெரிவிக்க வேண்டும். சிறப்புமிக்க இப்படத்தில் தேவையில்லா ஒரு காட்சியை வைத்து இத்திரைப்படத்தின் இயக்குனர் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார். அந்த கதைக் களத்திற்கு கொஞ்சமும் தொடர்பில்லாத வன்னியர்களின் அக்கினிச்சட்டியையும், ஜெ குருவின் பெயரையும் அவர் வைத்திருப்பது ஒரு தனிப்பட்ட சமூகத்தின் மீதான அவருக்குள்ள வன்மத்தை காட்டுகிறது. சூர்யாவும் இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்து வருகிறார். அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினரும் பாமக இளைஞரணி மாநில தலைவருமான அன்புமணி ராமதாஸ், இந்த விவகாரத்தை பொதுவெளிக்கு கொண்டுவந்திருக்க தேவையில்லை, இதை மிக எளிதாக பேசி முடித்து இருக்கலாம்.  மொத்தத்தில் இந்த விவகாரத்தில் ஒரு சமூகத்தை காயப்படுத்தும் வகையில் அந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளதை யாரும் மறுக்க முடியாது. 

எனவே நடிகர் சூர்யா இந்த விவகாரத்தில் அன்புமணி அண்ணனிடம் ஒரு வருத்தம் தெரிவிக்கலாம், இதன்மூலம் இந்த பிரச்சனை முடிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் சூர்யா பிடிவாதமாக இருக்கிறார். வருத்தம் தெரிவிப்பதில் தவறு ஒன்றும் இல்லை, இப்போது பாமகவினர் சூர்யாவை தாக்குவோம், அடிப்போம் என்று பேசும் அளவிற்கு இந்த பிரச்சனை சென்றுள்ளது, இந்த அவமானம் சூர்யாவுக்கு தேவைதானா.? என கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் இரு தினங்கள் கழித்து மீண்டும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அவர் (களஞ்சியம்) பாமக இப்போது அரசியல் செய்ய எதுவும் இல்லை என்பதால் சினிமாக்காரர்களை பிடித்து தொங்குகிறது. இப்போது நான் சொல்கிறேன் சூர்யா வருத்தம் தெரிவிக்காமல் இருப்பது தான் தமிழ் சினிமாவுக்கு நல்லது.

நீங்கள் சூர்யா ஒரு நடிகர் அவர் ஒரு சாதாரண ஆள் என எடை போடாதீர்கள், நீங்கள் செய்யாததை எல்லாம் அவர் சமூகத்தில் செய்திருக்கிறார், எத்தனை வன்னியர் பிள்ளைகளை அவர் படிக்க வைத்திருக்கிறார் தெரியுமா? பாமக மாவட்ட செயலாளர் ஒருவர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்ச ரூபாய் தருகிறேன் எனக் கூறுகிறார். இது என்ன புத்தி இது, ஆர்எஸ்எஸ் புத்தி, இது இந்துத்துவா புத்தி, அப்படி என்றால் உங்களை இயக்குவது யார்? நீங்கள் உங்களுக்கு செல்வாக்குள்ள பகுதியிலேயே தோற்கிறீர்கள் என்றால் என்ன அர்த்தம். ஒட்டுமொத்த வன்னியர்களும் உங்களை ஏற்கவில்லை என்று தானே அர்த்தம், பிறகு எப்படி வன்னிய மக்கள் வருத்தப்படுகிறார்கள் என்று நீங்கள் வன்னிய மக்களின் பிரதிநிதிகள் போல பேச முடியும். அண்ணன் தொல். திருமாவளவனை இழிவு செய்து ஒரு படம் வந்தபோது அந்த படத்தை பார்த்து விட்டு நீங்களும் உங்கள் தந்தையாரும் இது மிகச் சிறந்த படம் என்று பேசினீர்களே.

அப்போது உங்களுக்கு உறுத்தல் ஏற்படவில்லையா? ருத்ர தாண்டவம் படத்தை நீங்கள் கண்டிக்காதபோது,  இப்போது ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிராக பேச உங்களுக்கு தகுதி இல்லை. நான் ருத்ர தாண்டவம் பட இயக்குனர் மோகனை கேட்கிறேன், உனக்கு வரலாறு தெரியுமா? எந்த வரலாறும் தெரியாமல் ஆர்எஸ்எஸ் காரர்கள் பின்னால் நின்று கொண்டு, பிழையான திரைப்படங்களை  எடுப்பீர்களானால் சினிமா வரலாறு உங்களை மிக கேவலமாக பதிவு செய்யும். அந்தக் காலண்டரில் இருந்த அக்னி குண்டத்தை மாற்றிவிட்டு லட்சுமிபடம் வைத்தால் எச்.ராஜாவுக்கு அது இடிக்கிறது. இவர்களை போன்றவர்களுக்கெல்லாத் பதில் சொல்லிக்கொண்டு திரைப்படம் எடுக்க முடியாது. இது தொடர்பாக தொடர்ந்து பேசி வரும் கௌதமனின் பேச்சுக்களைக் கேட்கும் போது, எச். ராஜா பேசுவது போலவே இருக்கிறது. இவ்வாறு களஞ்சியம் கூறியுள்ளார்.  

click me!