
மறைந்த ஜெயலலிதா உடல்நலம் இல்லாமல் இருந்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சசிகலா பேசிய வீடியோ காட்சிகள் இருப்பதாகவும் அந்த வீடியோ பதிவை வெளியிட்டால் பல உண்மைகள் வெளிவரும் என்றும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெயானந்த் திவாகரன் அவரது முகநூல் பக்கத்தில் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின் பிளவு பட்டு கிடைக்கும் புரட்சி தலைவி அம்மா அதிமுக கட்சியினர் அவரது அவரது மரணம் மர்மமாக இருப்பதாகவும், நீதிவிசாரணை வேண்டுமென்றுஅறைகூவில் விடுத்துவருகின்றனர்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதித்ததிலிருந்து அவர் மரணித்த அந்த நிமிடம் வரை என்ன நடந்தது? அவரது புகைப்படம் ஏன் வெளியாகவில்லை? அவரது ஒலி பதிவு கூட வரவில்லை ஏன்? போன்ற கேள்விகள் சாதாரண மக்களுக்கும் அதிமுகவின் அடிமட்ட தொண்டனுக்கு உள்ள ஒரு சந்தேகம்.
இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் அண்மையில் தம்முடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது; கொலை பழி சுமத்தியும் அம்மா அவர்களின் சிகிச்சை படத்தை வெளியிட வில்லை...
காரணம் பச்சை கவுன் உடையில் அம்மா அவர்களின் எதிரிகள்
அதை பார்க்க கூடாது என்பதே ஒரே காரணம்
இது தியாகத்தலைவி சின்னம்மாவின் செயல்...
சிங்கத்தை நாங்கள் சிங்கமாகவே
பூ உலகை ஆளுவதற்க்கு ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்தோம்
ஆனால் ஓ.பி.எஸ் கேவலம் ஓட்டுக்காக புரட்சித்தலைவி அம்மா அவர்களை பிணப் பெட்டியில் வைத்து தற்போது ஓட்டு கேட்கிறார்
உண்மை வலிமையானது ஒருநாள் புரட்சித் தலைவி அம்மா அவர்களும்,தியாக
தலைவி சின்னம்மா இருவரும்
மருத்துவமனையில் உரையாடல்கள் வீடியோ வெளிவந்தால்...?
P.H.பாண்டியன்,
மனோஜ்பாண்டியன்,
ஓ.பன்னீர்செல்வம் இவர்களை என்ன செய்யலாம்...?
அந்த நாள் மிக விரைவில்....
இவ்வாறு ஜெயானந்த் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால் வீடியோ இருக்கா?