திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்திய நிலையில் வரும் அக்.,14ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஜெகத்ரட்சகன் நேரில் ஆஜராகும் படி சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெகத்ரட்சகனுக்கு செக்
முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னையில் உள்ள அவரது வீடுகள், பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அக்கார்டு நட்சத்திர ஓட்டல் மற்றும் ஜெகத்ரட்சகனின் உறவினர்கள், நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள், ஆழ்வார் ஆய்வு மையம், ரேலா மருத்துவமனை, அடுக்குமாடி குடியிருப்புகள், நியூ டெல்டா நிறுவன அலுவலகம், காஞ்சிபுரத்தில் உள்ள மதுபான ஆலைகள், அங்கு பணியாற்றும் ஊழியர் வீடு என 60க்கும் இடங்களில் வருமான வரித்துறையினரால் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பணம் சிக்கியதாக கூறப்படுகிறது.
undefined
5 நாட்களாய் தொடர்ந்த சோதனை
மேலும் ஜெகத்ரட்சகன் மகளின் வீட்டில் இருந்து வெளிநாட்டுக் கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மதிப்பு 2.45 கோடி ரூபாய் மதிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த வீட்டில் இருந்து கட்டுக் கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதே போல சவிதா கல்வி நிறுவனங்கள் 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் 27 கோடி ரூபாய் பணமும், 18 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் 1000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையின் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டடது.
நேரில் ஆஜராக சம்மன்
சம்மன் ஜெகத்ரட்சகன் நடத்தி வந்த அறக்கட்டளையின் வரி விலக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தான் வருமான வரித்துறை கடந்த 5 நாட்களாக சோதனையை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை சோதனை முடிவடைந்துள்ள வரும் அக்.,14ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஜெகத்ரட்சகன் நேரில் ஆஜராகி கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்