திடீர்னு ஹாஸ்பிட்டலுக்கு போங்க… அப்பத்தான் எவ்ளோ சுத்தமா இருக்குன்னு தெரியும் ! ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஜெகன் மோகன் உத்தரவு !!

Published : Jul 01, 2019, 07:10 PM IST
திடீர்னு ஹாஸ்பிட்டலுக்கு போங்க… அப்பத்தான் எவ்ளோ சுத்தமா இருக்குன்னு தெரியும் ! ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஜெகன் மோகன் உத்தரவு !!

சுருக்கம்

ஐஏஎஸ் அதிகாரிகள் ஒவ்வொரு வாரமும் மருத்துவமனை, மாணவர்கள் தங்கும் ஹாஸ்டல், பள்ளிகள் போன்றவற்றுக்கு சர்ப்ரைசாக விசிட் அடித்து ஒரு நாள் தங்க வேண்டும், அப்போது தான் அவை எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்  ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்ஆர்.காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. ஜெகன் மோகன் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் பொறுப்போற்றுக் கொண்டது முதல் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாணவர்களுக்கு இலவச கல்வி, லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை, சுற்றுக்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோமாக கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து தள்ளுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பொது மக்களிட்ம் வரவேற்பை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஆந்திர மாநில ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெகன் மோகன் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.  அதில் ஐஏஎஸ் ஒவ்வொரு வாரமும் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள். ஹாஸ்டல்கள் மற்றும் பள்ளிகளில் தங்கி அவை எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அங்கு செல்லும்போது சர்ப்ரைசாக போக வேண்டும், நீங்கள் அங்கு போவது யாருக்கும் தெரியக்கூடாது. அங்கு சென்று இரவு தங்கும்போது தான் அவை எவ்வாறு செயல்படுகிறது என்பது புரியும் என தெரிவித்துள்ளார்.

அங்குள்ள கழிப்பறைகள் சுத்தமாக இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.ஜெகன் மோகனின் இந்த அதிரடி உத்தரவால் ஐஏஎஸ் அதிகாரிகள் கலங்கிப் போயுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் கலெக்டர் எப்போது ஆய்வுக்கு வருவாரோ என்ற பயத்தில் மருத்துவமனைகள், பள்ளிகள், ஹாஸ்டல்களை ஊழியர்கள் சுத்தப்படுத்தி அழகுபடுத்தி வருகின்றனர். ஜெகன் மோகனின் இந்த திட்டத்துக்கு பொது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!