ஜெ.தீபா மாதவனுடன் மீண்டும் திருமணம்? – பதவி படுத்தும் பாடு...!

 
Published : Sep 27, 2017, 08:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
ஜெ.தீபா மாதவனுடன் மீண்டும் திருமணம்? – பதவி படுத்தும் பாடு...!

சுருக்கம்

j deepa marriage again with mathavan

மீண்டும் திருமணம் செய்து கொண்டால் முதலமைச்சர் ஆகலாம் என ஜோதிடர் ஒருவரின் பேச்சை கேட்டு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கணவர் மாதவனையே மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் இன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது அண்ணன் மகள் தீபா முதலில் அரசியல் பேச ஆரம்பித்தார்.

அப்போது சசிகலா தவிர யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஜெயல லிதாவை பார்க்க வந்த தீபாவிற்கு ஏமாற்றமே கிடைத்தது.

இதையடுத்து ச சிகலாவுக்கு எதிராக போர்கொடி தூக்க ஆரம்பித்தார் தீபா. பின்னர் ஜெ மறைவிற்கு பிறகு பன்னீருக்கும் ச சிக்கும் முட்டிகொண்ட து.

இதனால் பன்னீருடன் கைகோர்ப்பது போன்று சென்று விட்டு டாட்டா காட்டிவிட்டு வந்துவிட்டார்.

இந்த நிகழ்வின்போது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என தனி அமைப்பை உருவாக்கினார்.

இதைதொடர்ந்து அவரது கணவன் மாதவன் கட்சியில் வந்த பணத்தையெல்லம் சுருட்டி கொண்டு தனி ஆரமிப்பதாக கூறி வெளியே சென்று விட்டதாக  தகவல் பரவியது.

இதனால் தீபா பேரவையில் உச்சகட்ட குழப்பம் நிலவியது. ஆனால் மாதவன் திட்டவட்டமாக மறுத்தார்.

இதையடுத்து கதிகலங்கி போன தீபா அதிமுக எங்களுக்கே சொந்தம் என கூறி தேர்தல் ஆணையத்தில் பிரமான பத்திரங்களை தாக்கல்செய்தார்.

ஆனால் தேர்தல் ஆணையம் இவர்களை விளையாட்டுக்கு சேர்த்து கொள்ளவில்லை என்பது போன்ற சூழல் நிலவி வருகிறது.

இந்த கால கட்டத்தில் திடீரென பிரிந்து இருந்த மாதவனும் தீபாவும் ஒன்று சேர்ந்து தீபாவின் சகோதர ர் தீபக் அழைப்பின் பேரில் போயஸ்கார்டன் சென்று சரமாரியாக வாங்கி கட்டினார்.

இத்தகைய நிகழ்வுகளில் எப்படியாவது கட்சியை கைப்பற்ற வேண்டும் முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் ஜெ தீபா மனதில் நிலை கொண்டுவிட்ட து போலும். இதற்காக கோயில்களுக்கெல்லாம் மாதவனும் தீபாவும் சென்று வந்தனர்.

இதனால் தற்போது ஜோதிடரை நம்பி நகர்ந்துள்ளதாக தெரிகிறது.  அதாவது மாதவன், தனக்கு வேண்டப்பட்ட ஒரு ஜோதிடரை அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அவர் தீபாவின் ஜாதகத்தைப் பார்த்து விட்டு, நீங்கள் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்; அதற்கு முன்னதாக, நீங்கள் ஜெயலலிதா சமாதி முன்பாக, உங்கள் கணவர் மாதவனுக்கு மாலை மாற்றி, மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் ஆவி உங்கள் இருவரையும் ஆசிர்வதிக்க, தீபா, தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஆவார் என்று சொல்லியிருக்கிறார்.
எப்படியாவது தமிழகத்தின் முதல்வர் ஆகி விட வேண்டும் என்ற பரிதவிப்பில் இருக்கும் தீபாவும், மாதவனும், ஜோதிடர் அறிவுரைப்படி நடக்க ஆரம்பித்த தாக தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..