அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது.? கட்சியை வழிநடத்த யாருக்கும் தகுதி இல்லை.! ஜெ. நினைவு நாளில் தீபா ஆவேசம்

By Ajmal Khan  |  First Published Dec 5, 2022, 12:48 PM IST

என்னுடைய மறைவுக்கு பின்னாலும் 100 ஆண்டுகள் இந்த கட்சி இருக்கும் என ஜெயலலிதா கூறினார்; ஆனால், இவர்கள் 100 நாட்கள் கூட நன்றாக ஆட்சி செய்யவில்லை; அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது என ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.


ஜெயலலிதா நினைவு நாள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அதிமுகவில் இருந்த மூத்த நிர்வாகிகள் தனித்தனியாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.  காலை 10 மணிக்கு  எடப்பாடி பழனிசாமி அணியும், 10.30மணிக்கு ஓ.பன்னீர்செல்வம்,11 மணிக்கு டிடிவி தினகரன், 11.30 மணிக்கு - சசிகலா வும் தனித்தனியாக மரியாதை செலுத்தினர். இதனிடையே ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வசிக்கும் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

Tap to resize

Latest Videos

பொதுச்செயலாளராக அங்கீகரித்த டெல்லி..! உற்சாகத்தில் இபிஎஸ்..!என்ன செய்ய போகிறார் ஓபிஎஸ்

யாருக்கும் தகுதி இல்லை

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் படி முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர் சசிகலா தான் என கூறினார். ஜெயலலிதாவை போன்று அதிமுகவை வழிநடத்த தலைவர்கள் இல்லையென குறிப்பிட்டவர்,  ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக, சரியாக செயல்படவில்லையெனவும் கூறினார்.  இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகிய யாருமே அதிமுகவை வழிநடத்த தகுதியானவர்கள் இல்லையெனவும் விமர்சித்தார்.

G-20 ஆலோசனைக்கூட்டம்..! அதிமுகவிற்கு அழைப்பு..! மோடிக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சி அடைந்த எடப்பாடி

அதிமுக இனி இருக்காது

பதவியை தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அதிமுக தலைவர்கள் உள்ளனர். அதிமுகவில் 4 அணிகள் பிரிந்து நிற்கவில்லை; 4 நபர்களாகவே பிரிந்து நிற்கின்றனர்.  என்னுடைய மறைவுக்கு பின்னாலும் 100 ஆண்டுகள் இந்த கட்சி இருக்கும் என ஜெயலலிதா கூறினார்; ஆனால், இவர்கள் 100 நாட்கள் கூட நன்றாக ஆட்சி செய்யவில்லை; அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது, ஒட்டுமொத்த அரசியல் வாழ்வும் பிடிக்காததால் அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லையென தெரிவித்தார். அதன் காரணமாகத்தான்  அதிமுகவுடன் எந்த சம்பந்தமும் இல்லை என விலகி நிற்பதாக ஜெ.தீபா தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

துரோகிகளை தூள் தூளாக்குவோம்.! நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்திடுவோம்- ஜெ. நினைவுநாளில் இபிஎஸ் சபதம்
 

click me!