துரோகிகளை தூள் தூளாக்குவோம்.! நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்திடுவோம்- ஜெ. நினைவுநாளில் இபிஎஸ் சபதம்

By Ajmal KhanFirst Published Dec 5, 2022, 12:25 PM IST
Highlights

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், வெற்றிக் கூட்டணி, மெகா கூட்டணி அமைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட வேண்டும் என சபதம் ஏற்றுக்கொண்ட அதிமுகவினர் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என சூளுரைத்தனர். 

ஜெயலலிதா நினைவு நாள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அங்கு அமைக்கப்பட்ட மேடையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அப்போது பேசிய இபிஎஸ், 2014, நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், நாடே புகழும் வெற்றியைத் தேடித் தந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய இயக்கம் என்ற புகழைப் பெற்றுத் தந்தவர்; தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில், கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் பிறகு, ஆளுகின்ற கட்சியை தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி வரலாற்றுச் சாதனையை கழகத்திற்குப் பெற்றுத் தந்தவர்;

ஜெயலலிதா நினைவு நாள்..! பிளவுபட்ட அதிமுக..? நான்கு பிரிவாக அஞ்சலி செலுத்தும் நிர்வாகிகள்

எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும் என வீர முழக்கமிட்டவர்; திமுக ஆட்சிக் காலங்களில் திமுக-வினரால் நிகழ்த்தப்பட்ட முறைகேடுகளை எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் வெளிச்சம் போட்டுக் காட்டி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்; 2006-2011, திமுக ஆட்சியின் போது தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்குபெறுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தனி ஒருவராக சட்டமன்றத்திற்குச் சென்று, மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விஷயங்களையும், திமுக-வினரின் மக்கள் விரோதச் செயல்களையும் எடுத்துரைத்து சிங்கமென கர்ஜித்தவர்;

சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதிலும், பெண்கள் நலனைப் பாதுகாப்பதிலும் அம்மா அவர்கள் நெஞ்சுரமும் திறனும் கொண்டிருந்ததால், கனிந்த இதயம் கொண்ட இரும்புப் பெண்மணி என்று அனைவராலும் போற்றப்பட்டவர்; 34 ஆண்டுகள் உலகமே வியக்கும் வகையில் ஓய்வறியாது உழைத்து கழகத்தை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்தவர்; இத்தகைய போற்றுதலுக்குரிய புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நம் அனைவரையும் கண்ணீர்க் கடலில் ஆழ்த்திவிட்டு நம்மை விட்டும் இந்த மண்ணை விட்டும் மறைந்துவிட்டார்கள். அம்மா அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் கம்பீரமாய், நிலைத்த புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.பாரதி வெறும் டிரைலர் தான்.. இனிமேதான் திமுக எதிராக குரல்கள் எழும்.. கொளுத்தி போடும் ஜெயக்குமார்.!

அம்மா அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட அன்பு உடன்பிறப்புகளாகிய நாம், அவரது நினைவுகளைப் போற்றி, புகழ்ந்து, நினைத்து, நெஞ்சம் உருகி, அவரை வணங்கும் இந்த வேளையில், அவருக்கு நாம் ஆற்ற வேண்டிய நன்றிக் கடமைகள் பல உள்ளன என்பதை நினைவில்கொண்டு, கழகம் காக்கவும், கழகத்தைத் தேர்தல்களில் மகத்தான வெற்றிபெறச் செய்திடவும் அயராது உழைப்போம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு கழக ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கு நாம் அனைவரும் சபதமேற்று துடிப்புடன் களப்பணி ஆற்றிட இந்நாளில் உறுதி ஏற்போம் என தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து அவர் உறுமொழியை வாசிக்க அதனை அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரும்ப வாசித்தனர். அதில் முக்கியமாக  தடம் மாறாது, தடுமாறாது, நாம் கொண்ட கொள்கையில் லட்சியத்தோடு, வீறுநடை போடுவோம்; எதிரிகளை விரட்டியடிப்போம்; துரோகிகளை தூள் தூளாக்குவோம் என்று, வீர சபதம் ஏற்கிறோம்! வீர சபதம் ஏற்கிறோம்! இந்திய சரித்திர வானில், நாடாளுமன்றத்தின், மூன்றாவது பெரிய கட்சியாக, கழகத்தை மாற்றியவர், நம் புரட்சித் தலைவி அம்மா. வருகிறது வருகிறது, நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வருகிறது. இத்தேர்தலில், வெற்றிக் கூட்டணி, மெகா கூட்டணி அமைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட, சூளுரைப்போம்! சூளுரைப்போம்! நாற்பதும் நமதே, நாளையும் நமதே என்று, வீர சபதமேற்கிறோம்! வீர சபதமேற்கிறோம்! என உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். 

இதையும் படியுங்கள்

G-20 ஆலோசனைக்கூட்டம்..! அதிமுகவிற்கு அழைப்பு..! மோடிக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சி அடைந்த எடப்பாடி

click me!