G-20 ஆலோசனைக்கூட்டம்..! அதிமுகவிற்கு அழைப்பு..! மோடிக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சி அடைந்த எடப்பாடி

By Ajmal KhanFirst Published Dec 5, 2022, 11:38 AM IST
Highlights

 G-20 பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நான் கலந்து கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மோடிக்கு நன்றி- இபிஎஸ்

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் அணியை விட்டு விட்டு இபிஎஸ்க்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில்  G-20 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும், பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உலக அரங்கில் வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட G-20 அமைப்பு நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி வெற்றிபெற்ற மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக எனது நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அமைச்சர் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைகிறார்? ஓபிஎஸ் அதிர்ச்சி..!

இந்தியாவிற்கு கிடைத்த அங்கீகாரம்

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் கடின உழைப்பால், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் உயர்மட்ட பிரமுகர்களுடன் நல்லுறவைப் பேணி, இந்தியாவின் நற்பெயரை உயர்த்தியதன் காரணமாக, G-20ன் தலைமைப் பொறுப்பு சாத்தியமானது. இது 130 கோடி இந்தியர்களை தலைநிமிரச் செய்துள்ளது. G-20 தலைவர் பதவியை நமது நாடு பெற்றிருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் ஆகும். மேலும் G-20 தலைமைப் பொறுப்பு என்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டிய அளவுக்கு பெருமைக்குரியதாகும்.

ஜெயலலிதா நினைவு நாள்..! பிளவுபட்ட அதிமுக..? நான்கு பிரிவாக அஞ்சலி செலுத்தும் நிர்வாகிகள்

பெருமையும், மகிழ்ச்சியும்- இபிஎஸ்

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தலைமையில் G-20 நாடுகளின் உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில், ஜனாதிபதி மாளிகையில் இன்று (05.12.2022) நடைபெறவுள்ள G-20 பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நான் கலந்து கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

பொதுச்செயலாளராக அங்கீகரித்த டெல்லி..! உற்சாகத்தில் இபிஎஸ்..!என்ன செய்ய போகிறார் ஓபிஎஸ்

click me!