கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடையை மூடியதே தவறு.!! தூள் கிளம்பும் எம்பி கார்த்திக்சிதம்பரம்.!!

Published : May 10, 2020, 11:35 PM IST
கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடையை மூடியதே தவறு.!! தூள் கிளம்பும் எம்பி கார்த்திக்சிதம்பரம்.!!

சுருக்கம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ. 1 டோல்கேட் பகுதியில் கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் வழங்கினார்.  

ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மது கடைகளை அரசு மூடியதே தவறு என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் அதிரடியாக குண்டை தூக்கிப்போட்டுள்ளார். 

திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ. 1 டோல்கேட் பகுதியில் கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் வழங்கினார்.

உணவுப் பொருட்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கார்த்திக் சிதம்பரம்.அப்போது பேசியவர்.. "பூரண மதுவிலக்கு கொள்கை முடிவு என்பது தேல்வியே. ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு மதுபான கடையை மூடியதே தவறு. குறைந்த பட்சம் 2 மணி நேரமாவது மதுக்கடையை திறந்திருக்க வேண்டும்.அரசு மதுபானங்களை பணமில்லா வர்த்தகம் மற்றும் ஆன் லைன் மூலம் வர்த்தகம் மூலம் நடைபெற வேண்டும். ஊரடங்கு உத்தரவால் கொரோனா வைரஸ் வீரியத்தை கட்டுபடுத்தலாமே தவிர நோயை கட்டுபடுத்த முடியாது.

பொருளாதார வீழ்ச்சியால் தனிநபருக்கோ, தொழில்களுக்கோ ஊக்கத்தொகை, நிவாரணத்தொகை வழங்க மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டது. கொரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி தமிழக சட்ட மன்ற தேர்தலை தள்ளி வைக்க முடியாது எனக் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!