முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திடீர் நெஞ்சுவலி.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

Published : May 10, 2020, 10:46 PM ISTUpdated : May 10, 2020, 10:54 PM IST
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திடீர் நெஞ்சுவலி.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

சுருக்கம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திடீர் நெஞ்சுவலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திடீர் நெஞ்சுவலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

2004 - 2014 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். மன்மோகன் சிங் மிகச்சிறந்த பொருளாதார நிபுணரும் கூட. இந்தியாவின் நிதியமைச்சராகவும் இருந்துள்ளார்.

87 வயதான மன்மோகன் சிங், இன்னும் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார். கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் கூட அண்மையில் கலந்துகொண்டார். 

இந்நிலையில், அவருக்கு இன்று இரவு 9 மணியளவில் திடீர் நெஞ்சுவலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான கூடுதல் தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!