கொரோனா தொற்றை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தியது தமிழகம் தான்.. கெத்து காட்டி காலரை தூக்கிவிடும் எடப்பாடியார்

Published : Oct 26, 2020, 11:54 AM IST
கொரோனா தொற்றை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தியது தமிழகம் தான்.. கெத்து காட்டி காலரை தூக்கிவிடும் எடப்பாடியார்

சுருக்கம்

இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனையை திறந்து வைத்து விழாவில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி;- நோய் நாடி, நோய் முதல்நாடி என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி பேசினார். நலமான மாநிலமே, வளமான மாநிலமாக திகழும் தமிழகத்தில் பல முன்னோடி திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகின்றது. 

முதலமைச்சர் மருத்து காப்பீடு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.18,000 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் அதிகளவிலான பிரவசங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. தமிழகத்தில் 254 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன. 11 புதிய மருத்துவ கல்லூரிகள் மூலம் கூடுதலாக 1,650 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவத்துறையில் 2030ஆம் ஆண்டுக்கான இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டது. அரசு மருத்துவமனைகளில் கடந்த 3 ஆண்டில் மட்டும் 56 சி.டி.ஸ்கேன், 22 எம்.ஆர்.ஐ ஸ்கேன் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழகம் திகழ்கிறது.

மேலும், வளர்ந்த நாடுகளை காட்டிலும், கொரோனா வைரஸ் தொற்றை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தியது நம் நாடுதான். நோயாளிகளிடம் வித்தியாசம் பாராமல் தரமான மருத்துவம் வழங்க வேண்டும் என்றார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!