அடி தூள்... இந்தியாவில் கொரோனா பேராபத்து நீங்கியது..!! 90 சதவீதம் பேர் குணமடைந்தனர்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 26, 2020, 11:06 AM IST
Highlights

இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை இந்தியாவில் 79 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் சுமார் 90 சதவீதம் பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட  நாடுகளின் பட்டியலில்  இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இந்த அறிவித்திருப்பது நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 150-க்கும் அதிகமான நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் இதுவரை  4.33 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், 3.19 கோடி பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். உலக அளவில் அதிகமாக கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள்  இருந்து வருகிறது. 

இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை இந்தியாவில் 79 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக 21 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். சுமார் 6 லட்சத்து 53 ஆயிரத்து  701 பேர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 8,944 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

 

இந்தியாவின் பண்டிகை காலகட்டம் என்பதால் கொரோனா வைரஸ் அதிகமாக பரவ வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையுடன் செய்யப்பட வேண்டும் என அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நோய் தொற்று பரவல் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், வைரஸால் பாதிக்கப்படுவோர் வேகமாக குணமடைந்து வருகின்றனர். அதில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. எனவே இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 90 சதவீதமாக இருப்பதாகவும், உயிரிழப்பு விகிதம் 1.51 சதவீதமாக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

click me!