திருப்பதி: இன்று முதல் இலவச டோக்கன் தொடக்கம்.. பக்தர்கள் மகிழ்ச்சி..!

Published : Oct 26, 2020, 09:31 AM IST
திருப்பதி: இன்று முதல் இலவச டோக்கன் தொடக்கம்.. பக்தர்கள் மகிழ்ச்சி..!

சுருக்கம்

இன்று முதல் தினமும் 3,000 இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் ஆதார் அட்டையை காண்பித்து டோக்கன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தரிசனத்துக்கு முந்தைய தினம் டோக்கன் பெற வேண்டும் என்றும் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்துக்குப் பின் இலவச தரிசனத்துக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது.  கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவியதைத் தொடா்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் திருப்பதியில் அளித்து வந்த இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கனை தேவஸ்தானம் ரத்து செய்தது. அதற்கு பிறகு புரட்டாசி மாதம் தொடங்கியதால், அதை தேவஸ்தானம் மீண்டும் தொடங்கவில்லை.புரட்டாசி மாதம், நவராத்திரி பிரம்மோற்சவம் என அனைத்து உற்சவங்களும் நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை தொடங்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

 இந்த நிலையில் பக்தா்களின் கோரிக்கையை ஏற்று, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்துக்குப் பின் இலவச தரிசனத்துக்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியது. இன்று முதல் தினமும் 3,000 இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் ஆதார் அட்டையை காண்பித்து டோக்கன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தரிசனத்துக்கு முந்தைய தினம் டோக்கன் பெற வேண்டும் என்றும் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சித்திரவதையின் நரகம்..! பாஜக ஆட்சியில் நாட்டில் பரவும் பேராசையின் தொற்றுநோய்... ராகுல் அட்டாக்..!
திமுகவை வீழ்த்த பிளான் ரெடி.. தீய சக்தியை வேரறுப்பேன்.. சபதம் எடுத்த சசிகலா!