விஜய் ரசிகர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு... அரசியல் பிரவேசம் ஆரம்பம் என ரசிகர்கள் குஷி..!

Published : Oct 26, 2020, 08:54 AM ISTUpdated : Oct 26, 2020, 08:55 AM IST
விஜய்  ரசிகர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு... அரசியல் பிரவேசம் ஆரம்பம் என ரசிகர்கள் குஷி..!

சுருக்கம்

’1991 முதல் 2016 வரை சட்டமன்ற தேர்தலில் இருபெரும் தலைவர்களைக் கண்ட தமிழகம் தற்போது உள்ள வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே, நாளைய தமிழக முதல்வரே’இந்த போஸ்டர் தற்போது திருச்சி முழுவதும் வைரலாகி வருகிறது என்பதும் விஜய்யின் அரசியல் போஸ்டர் என்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   

 கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளை விஜய் நேரடியாக சந்தித்து பேசி, அரசியலில் இறங்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளிவந்தன.விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக உருமாறி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கினால் அது ரஜினிக்கும் கமலுக்கும் போட்டியாக அமையும். பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருவதற்கு பிரேக் போடவே திமுக போன்ற கட்சிகள் விஜய் அரசியலுக்கு வருவதை விரும்புவதாகவும் தகவல்கள் உலா வருகின்றது.
இந்தநிலையில்

இந்த நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் திருச்சியில் இதுகுறித்த போஸ்டர் ஒன்றை நகர் முழுவதும் ஒட்டி உள்ளனர்
அந்த போஸ்டரில்... ’1991 முதல் 2016 வரை சட்டமன்ற தேர்தலில் இருபெரும் தலைவர்களைக் கண்ட தமிழகம் தற்போது உள்ள வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே, நாளைய தமிழக முதல்வரே’இந்த போஸ்டர் தற்போது திருச்சி முழுவதும் வைரலாகி வருகிறது என்பதும் விஜய்யின் அரசியல் போஸ்டர் என்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!