கொரோனாவுக்கு சமாதி கட்டப்போவது இந்தியாதான்..!! மருந்து ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 26, 2020, 11:33 AM IST
Highlights

இந்நிலையில் ஒட்டு மொத்த உலகமும் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபட பிரத்யேக தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கின்றன. இந்தியாவிலும் அதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள கோவேக்சின் கொரோனா தடுப்பூசி  தற்போது மூன்றாவது கட்ட பரிசோதனையில் உள்ளது. அது மக்களின் பயன்பாட்டிற்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது என அம்மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாய் பிரசாத் தெரிவித்துள்ளார். 

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 150-க்கும் அதிகமான நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் இதுவரை  4.33 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், 3.19 கோடி பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். உலக அளவில் அதிகமாக கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள்  இருந்து வருகிறது. 

இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை இந்தியாவில் 79 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக 21 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். சுமார் 6 லட்சத்து 53 ஆயிரத்து  701 பேர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஒட்டு மொத்த உலகமும் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபட பிரத்யேக தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கின்றன. இந்தியாவிலும் அதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

இந்தியாவில் பெங்களூரைச் சேர்ந்த பயோ டெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கோவேக்சின்  என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. மேலும் பரிசோதனைகளில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிர்வாக இயக்குனர் சாய் பிரசாத் தெரிவித்துள்ளார். 

 

இதையடுத்து பாரத் பயோடெக் நிர்வாக இயக்குனர் சாய் பிரசாத் கூறுகையில், அவசரகால ஒப்புதலுக்கு மத்திய அரசு  தயாராகலாம் என நான் நினைக்கிறேன். ஆனால் அதுபோன்ற ஒப்புதலுக்கு நாங்கள் முனைப்பு காட்டவில்லை. அனைத்து விதமான பரிசோதனைகளையும் முடிந்த பின்னரே மருந்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். நாங்கள் எதிர்பார்த்தபடி அனைத்தும் சரியாக நடந்தால் 2019 ஜூன் மாதம் மருந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

 

click me!