சசிகலாவை வரவேற்க ரூ.198 கோடி கொடுத்ததே அமைச்சர் ஜெயகுமார்தான்... திருப்பியடிக்கும் டி.டி.வி.தினகரன்..!

Published : Feb 12, 2021, 04:19 PM IST
சசிகலாவை வரவேற்க ரூ.198 கோடி கொடுத்ததே அமைச்சர் ஜெயகுமார்தான்... திருப்பியடிக்கும் டி.டி.வி.தினகரன்..!

சுருக்கம்

சசிகலா வரும்போது கத்துறாங்க. நீங்க பதவியில இருந்துகிட்டு ஏன் பயப்படுறாங்க. வேற யாருமே கட்சி நடத்தக்கூடாதா? மூக்கை நுழைக்கிறேன்.. காலை நுழைக்கிறேன் என்கிறார்.

கடந்த 8ம் தேதி காலை 7.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா மறுநாள் 9ம் தேதி அதிகாலையில் சென்னை வந்து சேர்ந்தார். அமமுகவினரின் இந்த பிரம்மாண்ட வரவேற்புக்கு 192 கோடி செலவு செய்துதான் ஆட்களை அழைத்து வந்தார்கள் என்ற அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டுக்கு, ‘’பணத்தை கொடுத்தனுப்பியதே அவர்தானே..’’என்று திருப்பி அடித்தார் டி.டி.வி.தினகரன்.


 
நேற்று இரவு சசிகலாவை சந்திக்க வந்த டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு காலம் சிறையில் இருந்தவர் சசிகலா. அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்பது தார்மீக அரசியல் ஆகுமா? என்று கேட்கிறார்களே என்ற கேள்விக்கு, முதலமைச்சர் பதவி கொடுத்தவங்களுக்கு துரோக செய்யுறதுக்கு தார்மீக உரிமை இருக்கும்போது தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று சொல்வதற்கும் தார்மீக உரிமை இருக்கிறது. ஆட்சி அமைத்து கொடுத்தவருக்கே துரோகம் செய்யுறது எப்படி தார்மீக உரிமையோ? ராஜ தந்திரமோ? அப்படித்தான் தீவிர அரசியலில் வருவேன் என்று சொல்வதும்’’ என்றார்.

அப்போது, ‘’துரோகம் செய்துட்டார் எடப்பாடின்னு சொல்றீங்க. என்றைக்காவது ஒருநாள் அவரிடம், எதுக்கு இப்படி துரோகம் பண்ணிட்டீங்க’’ என்று கேட்டிருக்கிறீர்களா? , என்று கேள்விக்கு, ‘’எனக்கு துரோகம் பண்ணிட்டீங்களே எதுக்கு பேசணும்? பேசனுமா என்ன? இல்ல, துரோகம் பண்ணிட்டீங்க..திருப்பி கொடுத்திடுங்கன்னு கேட்டா திருப்பி கொடுத்திடுவாரா? மீட்டெடுக்கணும். அது இன்னைக்கோ நாளைக்கோ. மீட்டெடுக்கணும்.’’என்றவர்,

’’சசிகலா வரும்போது கத்துறாங்க. நீங்க பதவியில இருந்துகிட்டு ஏன் பயப்படுறாங்க. வேற யாருமே கட்சி நடத்தக்கூடாதா? மூக்கை நுழைக்கிறேன்.. காலை நுழைக்கிறேன் என்கிறார். இவர மாதிரி தவழ்ந்து போய் முதல்வர் ஆகுற குருட்டு அதிர்ஷ்டம் எல்லாருக்கும் கிடைக்குமா? நாலு காலு பிராணி மாதிரி தவழ்ந்து போய் முதல்வர் பதவி வாங்கி யாரையாவது இதுவரைக்கும் பார்த்திருக்கீங்களா?’’என்று கேட்டுவிட்டு சிரித்தார். 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி