எங்க கிட்ட தோத்துடுவோங்குற பயம்... ஐ.டி.ரெய்டால் அரண்டுபோன துரைமுருகன்... பாஜக மீது பாய்ச்சல்..!

Published : Mar 25, 2021, 03:58 PM IST
எங்க கிட்ட தோத்துடுவோங்குற பயம்... ஐ.டி.ரெய்டால் அரண்டுபோன துரைமுருகன்... பாஜக மீது பாய்ச்சல்..!

சுருக்கம்

தோல்வி பயத்தால் பாஜகவை தூண்டி விட்டு ஐ.டி.ரெய்டு செய்ய வைக்கிறது அதிமுக. திமுகவை தேர்தல் களத்தில் வெல்ல முடியாது என்பதால் வருமானவரி சோதனை நடத்துகின்றனர்.

தோல்வி பயத்தின் காரணமாகவே, மத்திய அரசை அதிமுக தூண்டி விட்டுள்ளதாக துரைமுருகன் குற்றச்சாட்டியுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலையில் போட்டியிடும் எ.வ.வேலுவின் வீடு, அவருக்கு சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம், அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக மு.க. ஸ்டாலின், திருவண்ணாமலையில் இன்று திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துவரும் நிலையில், மறுபக்கம் வருமான வரித்துறையினரின் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்;-  தோல்வி பயத்தால் பாஜகவை தூண்டி விட்டு ஐ.டி.ரெய்டு செய்ய வைக்கிறது அதிமுக. திமுகவை தேர்தல் களத்தில் வெல்ல முடியாது என்பதால் வருமானவரி சோதனை நடத்துகின்றனர். ஐ.டி ரெய்டு நடத்தினால் பயந்து போய்விடுவார்கள் என மத்திய அரசு நினைக்கிறது. இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம். 

ஸ்டாலின் தங்கியிருந்த கல்லூரி உள்பட ஐ.டி.ரெய்டு நடந்த இடங்களில்  எதுவும் சிக்கவில்லை. வருமானவரி சோதனைக்கும், தேர்தல் ஆணையருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறேன் என துரைமுருகன் கூறியுள்ளார். தேர்தல் ஆணையர் முன்கூட்டியே கருத்து தெரிவித்ததால் அவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுகிறது எனவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!