
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்ககிர் வீட்டிடல் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய வருமான வரித்துறையினரின் ரெய்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி வருவதாக டி.டி.வி.தினகரன் மீது புகார் எழுந்தது,
வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணம், பொருட்கள் போன்றவை எப்படி ? எங்கிருந்து வருகின்றன என்பது குறித்து வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில் நேற்று காலை 6 மணிக்கு வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கரின், சென்னை, கிரீன்வேஸ் சாலை இல்லம் உட்பட, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில், அதிரடி சோதனையை தொடங்கினர்.
இந்நிலையில் நேற்று காலை தொடங்கி 22 மணி நேரமாக நடைபெற்ற சோதனை, இன்று அதிகாலை 4 மணி அளவில் நிறைவு பெற்றது.
இதே போன்று புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று காலை சோதனையை தொடங்கிய வருமான வரித்துறையினர், 13 மணி நேரம் ஆய்வு நடத்தினர்.
இதில் 7 அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். மாலை 7.45 மணிக்கு சோதனையை முடித்தனர்.. அப்போது 3 பெட்டிகளில் முக்கிய ஆவணங்களை அள்ளிச்சென்றதாக கூறப்படுகிறது.
வருமான வரித்துறையினரின் ஆய்வு முடிந்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் விஜய பாஸ்கர், தனது வீடு மற்றும் தனது சகோதரர் வீடுகளில் வருமான வரித்துறையிளர் நடத்திய சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்தார். உள்நோக்கத்துடன் நடைபெற்ற இந் ரெய்டை சட்டப்படி எதிர் கொள்வேன் எனவும் தெரிவித்தார்.