
தாமாக தலைவர் ஜி.கே.வாசனை வீட்டுக்கு சென்று பன்னீர் சந்தித்ததும், வாசன் பன்னீர் அணிக்கு ஆதரவு அளித்ததும் அனைவரும் அறிந்த ஒன்று.
ஆனால் மாநிலங்கள் அவை உறுப்பினர், மைத்ரேயன்தான், அவரை ஓ.பி.எஸ் அணிக்கு கொண்டு வந்து சேர்த்தார் என்பது பலருக்கும் தெரியாது.
கடந்த தேர்தலில், மக்கள் நல கூட்டணியில் தேர்தலை சந்தித்து தோல்வி அடைந்த வாசன், பின்னர் அதில் இருந்து வெளியில் வந்து விட்டார்.
பன்னீர் அணியில் இருக்கும் மைத்ரேயனும் வாசனும், பல ஆண்டுகளாக நல்ல நண்பர்கள். அதனால், மைத்ரேயன்தான் வாசனிடம் பேசியிருக்கிறார்.
அதனால், நீங்கள் இந்த தேர்தலில் எங்கள் அணிக்கு ஆதரவு தரவேண்டும் என்று வாசனிடம் மைத்ரேயன் கேட்டுள்ளார்.
மேலும், எப்படியும் கூடிய விரைவில் சட்டமன்ற தேர்தல் வந்து விடும்.
அதிலும் நாம் நிச்சயம் கூட்டணி அமைப்போம். அதில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு சீட் கிடைப்பதற்கு, ஓ.பி.எஸ்ஸிடம் நான் பேசி வாங்கி தருகிறேன் அன்று வாசனுக்கு மைத்ரேயன் உறுதி அளித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் மிகவும் யோசித்த வாசன், பின்னர் அதற்கு ஓ.கே சொல்லி இருக்கிறார். தமாகா வில் உள்ள பலரும் அந்த முடிவு சரி என்றே சொல்லி இருக்கின்றனர்.
பிறகு தாமே வந்து ஆதரவு தெரிவித்தால் அது நன்றாக இருக்காது என்று வாசன் யோசித்திருக்கிறார்.
அதற்கு, நீங்களாக வர வேண்டாம், பன்னீர் உங்களை வந்து பார்ப்பார். நீங்கள் அதற்கு சரி என்று சொன்னால் போதும் என்று மைத்ரேயன் கூறி இருக்கிறார்.
அதன்படியே, பன்னீரும் வாசன் வீடு தேடி சென்று ஆதரவு கேட்க, அவரும் ஆதரவு தெரிவித்ததுடன், மதுசூதனனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவும் ஒப்புதல் அளித்துள்ளார்.
இப்படித்தான் வாசன் ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்தார் என்று ஓ.பி.எஸ் தரப்பினர் கூறுகின்றனர்.