தமிழகத்தை கைப்பற்ற செம பிளான் போட்ட பாஜக..!! நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் மோடி போட்டியா.?

By Ajmal KhanFirst Published Jan 2, 2023, 9:09 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களை கைப்பற்ற பாஜக தீவிர முயற்ச்சி மேற்கொண்டு வரும் நிலையில், ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட திட்டம் தீட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.
 

தமிழகத்தில் பாஜக

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜகவால் தமிழகத்தில் ஒற்றை இலக்க எண்ணிக்கையை தாண்ட முடியவில்லை. அதுவும் அதிமுக, திமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் தொகுதிகளை வெல்லும் நிலை உள்ளது. தென் மாநிலமான கர்நாடகவில் கால் ஊண்டியது போல் தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமைக்க திட்டம் தீட்டி வருகிறது. இதற்காக பல்வேறு கட்ட பணிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதலை பாஜக சரியாக பயன்படுத்த திட்டம் தீட்டியுள்ளது. எனவே தேர்தல் நேரத்தில்  அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் 25 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு தமிழகம் முழுவதும் பாஐக திட்டங்கள் தொடர்பான பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறது.

இந்திய துணை கண்டத்திலேயே.! ஸ்டாலின் தான்.. இந்துத்துவாவை வெளுத்து வாங்கிய ஆ.ராசா!

ராமநாதபுரத்தில் மோடி போட்டியா.?

திமுக அரசிற்கு எதிராக எதிர்கட்சியான அதிமுக போராட்டம் நடத்துவதற்கு முன்பாக பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. தற்போது ஆளும் கட்சியான திமுகவை எதிர்க்கும் வகையில் அதிமுகவை விட பாஜக முன்னிலையில் உள்ளது. மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் தமிழகத்தில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டும் வருகின்றனர். இந்தநிலையில் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 3 வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக திட்டங்களை வகுத்து வருகிறது. ஏற்கனவே பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியிலும் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் தொகுதியிலும் மோடி போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மக்கள் ஏற்றுக்கொள்வார்களா.?

தமிழகத்தில் மோடி போட்டியிடுவதால் மற்ற தொகுதிகளையும் எளிதாக பாஜக வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இருந்த போதும் தமிழகத்தில் பாஜகவை ஆதரிக்காத மக்கள் இந்த முறை மோடி தமிழகத்தில் போட்டியிடுவதால் பாஜகவை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதையும் படியுங்கள்

இது என்ன லவ் லெட்டரா? வாங்க மாட்டேன்னு திருப்பி அனுப்புவதற்கு? இபிஎஸ்ஐ வச்சு செய்யும் புகழேந்தி..!
 

click me!