தேர்தல் ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில் தான் மாநில தேர்தல் ஆணையர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கடிதம் அனுப்பி உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டம் யாராவது ஒருவர் சசிகலா காலில் விழாதவர்கள் இருக்கிறார்களா? என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓபிஎஸ்-ஐ சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி;- ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டு முதலமைச்சராக்கப்பட்டவர் ஓபிஎஸ். அவர் தான் வேண்டும் என தமிழகம் முழுவதும் குரல் ஓலிக்கிறது. முதுகில் குத்திய துரோகியான எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டம் யாராவது ஒருவர் சசிகலா காலில் விழாதவர்கள் இருந்திருக்கிறார்களா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை புறா தலையன் என்றும் விமர்சித்தார்.
தண்ணீரில் நீந்தும் உயிரினத்தை பார்த்து இருப்பீர்கள். ஆனால், தரையில் நீந்தி வந்தவர்கள் தான் எடப்பாடி பழனிசாமி. இபிஎஸ்யை பார்க்கும் போதெல்லாம் காலில் விழும் சீன் தான் ஞாபகத்துக்கு வருகிறது. இபிஎஸ் மன்னிப்பு கடிதம் எழுதி ஓபிஎஸ்சிடம் கொடுத்து விட்டு, அவரின் தலைமையை ஏற்கட்டும். அனைவரும் ஒருங்கிணைந்து செல்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என தலைமை தேர்தல் ஆணையர் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை எடப்பாடி தரப்பினர் ஏற்க மறுத்துள்ளனர். இது என்ன காதல் கடிதமா? வாங்க மாட்டேன் என திருப்பி அனுப்புவதற்கு? தேர்தல் ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில் தான் மாநில தேர்தல் ஆணையர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கடிதம் அனுப்பி உள்ளனர்.
முன்னாள் சபாநாயகர் தம்பிதுரையின் தூண்டுதலின் பேரிலேயே கடிதத்தில் இடைக்கால பொதுச்செயலாளர், பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமி என்று குறிப்பிட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்க வேண்டும் என முதலில் அரசுக்கு கோரிக்கை விடுத்தது ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை விடுத்ததால் தான் ஸ்டாலின் செயல்படுத்தினார் என்பது ஏற்புடையது அல்ல எனவும் புகழேந்தி கூறினார்.