அமைச்சரானதும் முதல் முறையாக டெல்லிக்கு சென்ற உதயநிதி..! மோடியை சந்திக்க திட்டமா.? ஆச்சர்யத்தில் பாஜக

By Ajmal Khan  |  First Published Feb 27, 2023, 10:55 AM IST

தமிழக அமைச்சராக பதவியேற்றதுக்கு பின் முதல்முறையாக டெல்லி சென்றுள்ள உதயநிதி பிரதமர் மோடியை சந்தித்து விளையாட்டுதுறை தொடர்பான கோரிக்கைகளை அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


திமுகவின் வெற்றியில் உதயநிதியின் பங்கு

2011 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை இழந்த திமுக, சுமார் 8 வருடங்கள் தொடர் தோல்விகளை மட்டுமே பெற்று வந்தது. இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நடாளுமன்ற தேர்தலில் தான் திமுகவின் பக்கம் வெற்றி திரும்பியது. இதற்க்கு முக்கிய காரணமாக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் பார்க்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெற்றிக்காக தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உடனே உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைச்சரவை பொறுப்பு வழங்காமல் அரசின் செயல்பாடுகளை கவனிக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

Latest Videos

தீவிரவாதத்தை தூண்டும் அண்ணாமலையை கைது செய்திடுக! வன்முறை பேச்சின் பின்னனி என்ன ? கேள்வி எழுப்பும் காங்கிரஸ்

அமைச்சராக பதவியேற்ற உதய்

சுமார் 20 மாதங்களுக்கு பிறகு உதயநிதிக்கு தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை வழங்கப்பட்டது. இதனையடுத்து விளையாட்டுத்துறை திட்டங்களையும், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உதவிகளையும் தீவிரமாக செயல்படுத்தி வந்தார். தினந்தோறும் விளையாட்டு வீரர்களை சந்தித்து உற்சாகமும் படுத்தி வந்தார். இந்தநிலையில்  தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக உதயநிதி  டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்து தமிழகத்தில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளை நடத்த வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிரதமரை சந்திக்கிறாரா உதயநிதி.?

மேலும் பிரதமர் மோடியை நாளை காலை உதயநிதி சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்க இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் தமிழக  மாணவர்கள் தாக்கப்பட்டதையடுத்து உடனடியாக மாணவர்களிடம் வீடியோ கால்மூலம் பேசி ஆதரவு தெரிவித்து இருந்தார். எனவே இந்த பயணத்தின் போது அந்த மாணவர்களை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த ஆண்டு டெல்லியில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள டெல்லி கலைஞர் அறிவாலயத்திற்கும் உதயநிதி செல்லுவார் என கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

பிறந்தநாளுக்கு பேனர் வேண்டாம்..! ஆடம்பரங்களையோ,ஆர்ப்பாட்டங்களையோ நான் ஒருபோதும் விரும்புவதில்லை- மு.க.ஸ்டாலின்

click me!