BJP Vs Congress :பாஜகவுக்கு இன்னொரு பேர் இருக்கு… தெரியுமா..? காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அதிரடி !

By Raghupati RFirst Published Dec 3, 2021, 12:21 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சியை தவிர்த்துவிட்டு பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைப்பது சாத்தியமில்லை என்று  காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

‘விரைவில் வரப்போகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை எல்லா கட்சிகளும் இப்போதே தொடங்கிவிட்டன. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இதை மாற்ற முடியும். ஆனால், அதற்கு 300 எம்.பி.க்கள் நமக்கு வேண்டும். ஆனால், 2024-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும்கூட காங்கிரஸ் இந்த எண்ணிக்கையை பெற முடியாது. ஒரு வேளை கடவுள் விரும்பினால் நாம் வெற்றி பெறுவோம். ஆனால், இப்போதைக்கு வாய்ப்பில்லை. அதனால்தான் நான் எந்தப் பொய்யான வாக்குறுதிகளையும் கொடுக்க மாட்டேன். மேலும், காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் சிக்கிக்கொண்டுள்ளது. அதைத் தாண்டி அக்கருத்துக்கள் வெளியே வருவதில்லை’ என்று குலாம் நபி ஆசாத் பேசினார்.

இது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சர்ச்சையை கிளப்பியது.இது ஒருபக்கம் இருக்க, மற்றொரு பக்கம் மம்தா பானர்ஜி மூன்றாவது அணியை உருவாக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான   திக்விஜய் சிங் நேற்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதில், ‘எங்களுடன் சேர விரும்புபவர்கள் எங்களுடன் வரவும், விரும்பாதவர்கள் யாருடனும் சேரலாம். 

எங்கள் போராட்டம் ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிரானது ஆகும். காங்கிரஸைத் தவிர அனைத்துக் கட்சிகளும் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன. ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிராகப் போராடுவது காங்கிரஸ் கட்சிதான். நாங்கள் இல்லாமல் பாஜகவுக்கு எதிராக இந்த நாட்டில் எந்த அரசியல் கூட்டணியும் சாத்தியமில்லை.

இந்த நாட்டின் எல்லா அரசியல் சண்டைகளுக்கும்  சித்தாந்தமே முக்கிய காரணம். இந்தியாவில் இரண்டு வகையான சித்தாந்தங்கள் உள்ளன, ஒன்று 'காந்தி மற்றும் நேரு', மற்றொன்று மதத்தை அரசியலில் ஆயுதமாகப் பயன்படுத்தும் 'சங்கம்'. காங்கிரஸ் மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தியதில்லை. அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் தான்,  பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக போராட வேண்டும். உத்தரபிரதேசத்திலும் பாஜகவுக்கு எதிராக பிரியங்கா காந்தி மட்டுமே போராடி வருகிறார்’ என்று கூறினார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரப்போகும் சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருவது, அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!