மீண்டும் ஊரடங்கா..? பாமக ராமதாஸ் சொல்லும் ஷாக் தகவல்..!

By Thiraviaraj RMFirst Published Dec 3, 2021, 11:52 AM IST
Highlights

ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’தமிழ்நாட்டில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்குடன் தமிழக வனத்துறையினர் அதிக அளவில் விதைகளை சேகரித்து, மரக்கன்றுகளை 3 அடி உயரத்திற்கு வளர்க்கும் வகையில் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு நர்சரியைத் தொடங்க வேண்டும்!

வனத்துறை நர்சரிகளில் கடும் புயலையும் தாங்கக் கூடிய மரக்கன்று வகைகளை உருவாக்கி அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு இலவசமாக கொடுத்து வளர்க்க ஊக்குவிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில்  மரங்களை வளர்ப்பவர்களுக்கு ஊக்கப்பரிசுகளையும் வழங்கலாம்!

ஓமைக்ரான் வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்தவழி தடுப்பூசி செலுத்துவதையும் கொரோனா சோதனை செய்வதையும் தீவிரப்படுத்துவது தான் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர். அந்த நடவடிக்கைகளை தமிழக அரசு இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்! ஓமைக்ரான் கொரோனாவை தடுக்க தடுப்பூசி மிகவும் அவசியம். அதனால் பொதுமக்கள் தயக்கமின்றி, தமிழக அரசு நடத்தும் தடுப்பூசி முகாம்கள், அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஓமைக்ரான் பரவலைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டும்.

ஓமைக்ரான் கொரோனா வேகமாக பரவத் தொடங்கினால் ஊரடங்கு பிறப்பிக்க நேரிடும். இன்றைய சூழலில் மக்களாலும், அரசாலும் இன்னொரு ஊரடங்கை சமாளிக்க முடியாது. எனவே, ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

click me!