TASMAC : குடிமகன்கள் கவனத்துக்கு..! டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றம்... உடனடியாக அமலுக்கு வந்தது..

Published : Dec 03, 2021, 12:14 PM ISTUpdated : Dec 03, 2021, 12:48 PM IST
TASMAC : குடிமகன்கள் கவனத்துக்கு..! டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றம்... உடனடியாக அமலுக்கு வந்தது..

சுருக்கம்

கொரோனா தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் மூடப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் மூடப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் அதன் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டு வந்தன. கொரோனா தொற்று அதிகமுள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமால் இருந்து வந்தன.

தற்போது டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி இயங்கி வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் கொரேனா தொற்று முன் இருந்தது போல் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை குறைந்ததால் கடும் நஷ்டம் ஏற்பட்டதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்பதால் அதன் வருமானம் அதிகரிக்க கூடும். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றவும் அனைத்து டாஸ்டாக் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!