கல்வி விவகாரத்தில் அரசியலை புகுத்தக்கூடாது! கன்னடரை அண்ணா பல்கலை துணை வேந்தராக நியமித்தது சரியான நேரம் இல்லை! ரஜினிகாந்த்

First Published Apr 8, 2018, 12:13 PM IST
Highlights
it is not perfect time appoint kannadiga as anna univ vc-rajini


காவிரி மேலாண் வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவது போராட்டம் வலுத்து வரும் இந்த நிலையில், கன்னடர் ஒருவரை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்திருப்பது சரியான முடிவு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சூரப்பா என்பவரை ஆளுநர் பன்வாரிலால் நியமனம் செய்திருந்தார். சூரப்பாவின் நியமனத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். 

அண்ணா பல்கலைக்கழ துணை வேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டதை அரசியலாக்க வேண்டாம் என்றும் ஆளுநர் பன்வாரிலால் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, காவிரி போராட்டம் நடக்கும் இந்த சமயத்தில் கன்னடர் ஒருவரை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமித்திருப்பது சரியான முடிவு இல்லை என்று கூறினார்.

இது மக்கள் மனதை புண்படுத்தும் என்றும் அவர் கூறினார். மேலும், கல்வி விவகாரத்தில் அரசியலை எப்போதும் புகுத்தக்கூடாது. இந்த நேரத்தில் கர்நாடகாவை சேர்ந்தவரை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமித்திருப்பது தவறு என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

click me!