இந்தி ஒழிக என்று சொல்வது என் வேலை இல்லை.. உதயநிதியை மேடையில் வைத்துக் கொண்டு கமல்ஹாசன் டுவிஸ்ட்.

Published : May 17, 2022, 02:20 PM ISTUpdated : May 17, 2022, 02:25 PM IST
இந்தி ஒழிக என்று சொல்வது என் வேலை இல்லை.. உதயநிதியை மேடையில் வைத்துக் கொண்டு கமல்ஹாசன் டுவிஸ்ட்.

சுருக்கம்

இந்தி ஒழிக என்று சொல்வது தன் வேலை இல்லை என்றும் ஆனால் தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை என்றும் நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். அதற்கு இடையூறாக யார் வந்தாலும் எதிர்த்து நிற்பேன் என்றும் அவர் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.  

இந்தி ஒழிக என்று சொல்வது தன் வேலை இல்லை என்றும் ஆனால் தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை என்றும் நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். அதற்கு இடையூறாக யார் வந்தாலும் எதிர்த்து நிற்பேன் என்றும் அவர் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தேசிய மொழியாக இந்தியை அறிவிப்பதற்கான முயற்சியில் அடிக்கடி ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் சமிபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியை தேசிய தொடர்பு மொழியாக அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து தென் மாநிலங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  குறிப்பாக தமிழகம் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் அமித் ஷாவின் இந்த பேச்சு இந்தித்திணிப்புக்கான முயற்சி என்றும் ஒருபோதும் அதை அனுமதிக்க முடியாது என்றும் கொந்தளித்து வருகின்றன. இந்நிலையில் பல அரசியல் கட்சித் தலைவர்களும் அமித்ஷாவின் இந்த கருத்தை கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன் ஹிந்தி எதிர்ப்பது என் வேலை அல்ல தமிழ் வாழ்க்கை என்று சொல்வது என் கடமை எனக் கூறியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம், இந்த இப்படத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் கமல்ஹாசன் சொந்தமாக பாடல் எழுதி அதைப் பாடியுள்ளார், அந்த பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் நடிகர் கமலஹாசன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்:- இந்தி ஒழிக என்று சொல்வது என் வேலை இல்லை, ஆனால் தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை, அதற்கு எதிராக யார் வந்தாலும் நான் எதிர்த்து நிற்பேன், இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை, இந்தியாவின் அழகு அதன் பன்முகத் தன்மையில்தான் இருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு என் படத்தின் விழா நடக்கிறது அதற்கு நான் காரணம் அல்ல நீங்கள் தான்.

யாருமே இங்க முழு நேர அரசியல்வாதி அல்ல நான்  முதன்முதலில் அரசியலுக்கு வருகிறேன் என்ற போதே டிஆர் என்னை தேடி வந்து கதறி கதறி அழுதார். நீங்கள் எப்படி இப்படி பண்ணலாம் என கேட்டு அழுது என் சட்டை நனைந்து போனது. என் முடிவுக்கு நான் உட்பட பலரும் வருத்தப்பட்டார்கள். புது நாகரிகத்தை வளர்க்க அரசியலுக்கு வந்துள்ளேன். இப்போது வரவில்லை என்றால் எப்போதும் இல்லை. இந்த அளவுக்கு நான் தமிழ் உச்சரிப்பதற்கு காரணம் சிவாஜி, கலைஞர், கண்ணதாசன் அவரின் தாத்தாவின் நெருங்கிய பயணம் தற்போது உதயநிதி வரை தொடர்கிறது. இந்த படத்தை ரெட் ஜெயின்ட் வெளியிடுகிறார்களா என கேட்டனர்.  தமிழக முதலமைச்சர் வுடன் அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு உண்டு, ரஜினியும் நானும் போட்டியாளர்களாக இருந்து கொண்டே நண்பர்களாக இல்லையா? அது போன்றதுதான் என்றார். 

 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!