5 ஆண்டுகளில் யாரும் கனவு காண முடியாத பொற்கால ஆட்சியை திமுக அரசு கொடுக்கும்.. பழனிவேல் தியாகராஜன்.

By Ezhilarasan BabuFirst Published May 17, 2022, 1:30 PM IST
Highlights

இன்னும் 5 ஆண்டுகளில் யாரும் கனவு காண முடியாத பொற்கால ஆட்சியை திமுக அரசு கொடுக்கும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.  நான் முதன்மையான முதல்வர் என்பதைவிட தமிழகம் ஒரு முதன்மையான மாநிலமாக மாற வேண்டும் என முதல்வர் கூறி வருகிறார். 

இன்னும் 5 ஆண்டுகளில் யாரும் கனவு காண முடியாத பொற்கால ஆட்சியை திமுக அரசு கொடுக்கும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.  நான் முதன்மையான முதல்வர் என்பதைவிட தமிழகம் ஒரு முதன்மையான மாநிலமாக மாற வேண்டும் என முதல்வர் கூறி வருகிறார். இதற்குமுன் இவரைப்போல ஒரு முதல்வரை பார்த்ததுண்டா எனவும் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் பொதுக்கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. அதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :-

பலவகைகளில் இந்த அரசு முன்மாதிரியான அரசு என பலர் கூறி இருக்கிறார்கள், நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர்கள் எங்கள் உரையின்போது குறுக்கிட்டு நீங்கள் கொடுத்த பட்ஜெட்டில் சிறப்பு இல்லை என பல குறைகளை கூறி இருக்கிறார்கள், அந்த அடிப்படையில் நான் அவர்களை கேட்கிற ஒரே ஒரு கேள்வி, 2001 பிப்ரவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட்டை நீங்கள் சமர்ப்பிக்க அப்போது கொரோனா இரண்டாவதாக தொடங்கும் என்றும் பருவமழை அதிகமாகப் பெய்யும் என்றும் யாரும் கணிக்க முடியாத சூழல், ஆனால் கொரோனா மற்றும் மழை காலங்களில் நீங்கள் உருவாக்கிய பட்ஜெட்டை விட பத்தாயிரம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்து இவற்றுக்கு நாங்கள் முடிவு கண்டுள்ளோம் என்றார்.

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கியிருக்கிறார் என்றும் ஜனநாயகத்தின் அடிப்படையில் அமைப்பு சட்டமன்றம் அதுதான் புதிய சட்டங்களை உருவாக்கவும், இருக்கும் சட்டங்களை நிறுத்தவும் கூடியது, ஆனால் கடந்த ஐந்து வருட சட்டமன்றம் எவ்வாறு நடந்தது, எவ்வளவு அநாகரீகமாக நடந்து கொண்டார்கள் சட்டமன்ற கூட்டத்தில் ஜனநாயக மரபை மீறியது யார்? அவர்கள் நடத்தியதைப் போன்ற ஜனநாயகம் எந்த மாநிலத்திலும் இருக்க முடியாது? எந்த மாநிலத்திலும் இதுவரை ஆதிதிராவிடர்களுக்கு நற்பணி குழு அமைக்கப்பட்டது. இல்லை இந்த ஆட்சியில்தான் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவை முதல்வர் வழிநடத்துகிறார். அந்த குழுவுடன் அமைக்கப்பட்ட கூட்டத்தில் கேட்கப்பட்ட கோரிக்கைகளை கொண்டு அடுத்த நாள்காலை சட்டமன்றத்தில் 110 விதிகளின்படி அவர்களது கோரிக்கைகளை சட்டமன்றத்தில் முன்வைக்கிறார் இவரைப்போல ஒரு முதல்வரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா.

இதுதான் நமது முதல்வரின் செயல் திறனுக்கு எடுத்துக்காட்டு நான் முதன்மையான முதல்வர் என்பதை காட்டிலும் தமிழகம் முதன்மையான மாநிலமாக மாற வேண்டும் என நமது முதல்வர் கூறுகிறார். சட்டமன்றத்தில் 3540 கோப்புகளில் நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின் கையெழுத்திட்டு இருக்கிறேன், ஆனால் இதுவரை ஒரு முறை கூட முதல்வர் தவறு என என்னை அழைத்து கேட்டது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் இதனைத் தாண்டி அடுத்த சாதனைக்கு முன்னேறிச் செல்வோம் என்பது உறுதி, இன்னும் 5 ஆண்டுகளில் யாரும் கனவு காண முடியாத தமிழகத்தை பொற்கால ஆட்சியை இந்த அரசு உருவாக்கம் இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!