அடுத்த 4 நாட்களுக்கு அடித்து ஊற்றப்போகிறது மழை.. குறிப்பாக இந்த பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.

By Ezhilarasan BabuFirst Published May 5, 2021, 2:41 PM IST
Highlights

இதேபோல் 6-5-2021 மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

குமரி கடல் பகுதிகளில் 5.8 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 5-5-2021 மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 6-5-2021 மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7-5-2021 மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

8-5-2021, 9-5-2021 மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும், கடலோர மாவட்டங்களில் காற்றின் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது, 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை, இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்,  சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

காற்றின் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதன் காரணமாக, மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு சுராலகோடு (கன்னியாகுமரி) சங்கரன்கோவில், (தென்காசி)  தலா 7 சென்டி மீட்டர் மழையும் பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 6 சென்டி மீட்டர் மழையும், திண்டுக்கல்,  சிவலோகம் (கன்னியாகுமரி) தாராபுரம், (திருப்பூர்) மணல்மேடு (நாகப்பட்டினம்) தலா 4  சென்டி மீட்டர் மழையும் சூலூர், (கோவை) ராசிபுரம் (நாமக்கல்) குடவாசல் (திருவாரூர்) காட்டுமன்னார் கோயில் (கடலூர்) தலா 3 சென்டிமீட்டர் மழையும், தேக்கடி (தேனி) கொடைக்கானல்  சங்கரிதுர்க் (சேலம்) வத்திராயிருப்பு (விருதுநகர்) சோழவந்தான்,(மதுரை)  ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி) கரூர் பரமத்தி தலா 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

 

click me!