பாஜக ஆட்சியில் வாழ்வதை விட கொரோனாவுடன் வாழ்வது எளிது... மத்திய அரசை பங்கம் செய்த சீமான்..!

By vinoth kumarFirst Published Mar 25, 2021, 4:28 PM IST
Highlights

எல்லா வளமும் இருந்தும், நாட்டில் பலர் இன்னமும் முன்னேறாமலேயே இருக்கிறார்கள். இதற்கு ஆட்சியாளர்களே காரணம் என சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

எல்லா வளமும் இருந்தும், நாட்டில் பலர் இன்னமும் முன்னேறாமலேயே இருக்கிறார்கள். இதற்கு ஆட்சியாளர்களே காரணம் என சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடை பெறுகிறது. ஆகையால், சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ராசிபுரத்தில் இன்று காலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்;- மத்தியில் உள்ள பாஜக அரசு இந்தி மொழியை திணிக்கிறது. இன்று கல்வி, மருத்துவம், குடிநீர் என அனைத்துமே தனியார் மயமாகி விட்டது. நாம் நமது நாட்டை நமது நாடு என்று கூற முடியாத நிலையில் உள்ளோம்.

அதானியும், அம்பானியும் நமது நாடு என்று சொல்லிக் கொள்ளலாம். எல்லாமே தனியார் மயமாக்கிவிட்டால் அரசின் வேலைதான் என்ன? மக்களின் நலன் பற்றி சிந்திக்காத தலைவர்களே தற்போது உள்ளனர். இவர்கள் தனியார் முதலாளிகளின் தரகர்களாக இருக்கிறார்கள். கொரோனா காலத்தில் 80 கோடி ஏழைகளுக்கு உதவி செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இவ்வளவு பேர் ஏழைகளாகவே இருப்பதற்கு நீங்கள்தானே காரணம். பாஜக ஆட்சியில் வாழ்வதை விட கொரோனாவுடன் வாழ்வது எளிதாகும். அந்த அளவுக்கு பாஜக கொரோனாவை விட கொடியதாகும்.  எல்லா வளமும் இருந்தும், நாட்டில் பலர் இன்னமும் முன்னேறாமலேயே இருக்கிறார்கள். இதற்கு ஆட்சியாளர்களே காரணம் என சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

click me!