சீக்கிரம் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது .. மாநகர ஆணையர் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Apr 10, 2021, 12:09 PM IST
Highlights

சென்னை உள்ளிட்ட கடற்கரைகளை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும், பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.  

சென்னை உள்ளிட்ட கடற்கரைகளை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும், பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். 

சென்னை பாலவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம், வீடு வீடாக சென்று நடத்தப்படும் பரிசோதனைகளை பார்வையிட்ட பின் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அறிகுறிகள் தென்படும் போது தொடக்கத்திலேயே சோதனை செய்துக்கொண்டால் உயிரிழப்புகளை தடுப்பதோடு மற்றவர்களுக்கும் நோய் பரவுவதையும் தவிர்க்க முடியும் என்றார். சென்னையில் தடுப்பூசி செலுத்த வேண்டிய 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 லட்சம் பேர் உள்ளனர், அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்தால் 10 நாட்களில்  அனைவருக்குமே தடுப்பூசி செலுத்திவிட முடியும் என்றார். முடிந்தவரை சீக்கிரம் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது என்றார். 

45வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 பேருக்கு குறையாமல் சேர்ந்து அனுகினால், அவர்கள் இருப்பிடத்திலேயே தடுப்பூசி முகாம்கள் ஒருங்கிணைக்கப்படும் மேலும் ஒவ்வொரு வார்டுகளிலும் காய்ச்சல் முகாம்களும், வீடுவீடாக சென்று சோதனையும் செய்யப்படுகிறது. வீடுகளுக்கு சோதனை செய்ய வருபவர்களிடம் பொதுமக்கள் ஒளிவுமறைவின்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சென்னையில் அடுத்த இருபது நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும் என்ற அவர், விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிப்பது வருவாய்காக இல்லை, மக்களிடையே கட்டுப்பாடு கொண்டு வரவே என்றார். 

அதேபோல் கொரோனா நம் வாழ்க்கையில் ஒரு அங்கம் போல் ஆகிவிட்டதால் அதனை முழுமையாக முடக்க முடியாது என்று கூறிய பிரகாஷ், கோயம்பேடு இல்லாமல் 80 மார்க்கெட்டுகள் சென்னையில் உள்ளது என்றும், குறிப்பாக அதிக கூட்டம் விடுமுறை நாட்களில் காசிமெட்டில் கூடுகிறது என்றும் கூறினார். எனவே அந்த பகுதி தான் மிகவும் சவாலாக இருக்கிறது என்று கூறிய அவர், மீன்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அந்த பகுதியில் கூட்டம் குறைக்க முடிவெடுக்கப்படும் என்றார்.மெரினா கடற்கரை உள்ளிட்ட மக்கள் கூடும் இதர இடங்களில் கட்டுபாடு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 
 

click me!