அதிமுக பொதுக்குழு வழக்கு..! தீர்ப்பு எப்போது தெரியுமா..? உச்சநீதிமன்ற நீதிபதிகள் புதிய தகவல்

By Ajmal KhanFirst Published Jan 27, 2023, 2:52 PM IST
Highlights

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கான் வேட்புமனுவுக்கு கடைசி நாளுக்கு முன்பாக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்க முடியுமா என்பதை பார்க்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 

ஒற்றை தலைமை மோதல்

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகள் இருந்து வந்த நிலையில் அதனை நிர்வகித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது.  இதனையடுத்து நடைபெற்ற அதிமுக.வின் பொதுக்குழுவில்  இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டும், ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு தரப்புக்கும் ஆதரவாக மாற, மாறி தீர்ப்பு வந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர்.  ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை  நிறைவடைந்து தீர்ப்பானது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி; அமமுக சார்பில் இளம் வேட்பாளருக்கு வாய்ப்பளித்த டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா.?

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைவையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தலானது பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அ.தி்மு.க  வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை  நடைபெற்று வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இரண்டு தரப்பு சார்பாகவும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து அதிமுக பொதுக்குழு விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் ஆஜராகி ஈ.பி.எஸ் தரப்பு கோரிக்கைகளை முறையீடாக முன்வைத்தார்.

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு எப்போது.?

குறிப்பாக பொதுக்குழு வழக்கின் விசாரணையை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள  நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு  வேட்பாளரை நிறுத்த விரும்புவதாகவும், ஆனால் பொதுக்குழு வழக்கு  தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் அளிக்கப்படாமல்  இருப்பதை சுட்டிக்காட்டி தனது கையொப்பமிட்ட வேட்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. எனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு சில அறிவுறுத்தல்களை கொடுக்க வேண்டும் குறிப்பாக அதிமுக.வின் பொதுக்குழுவால்  தேர்ந்தெடுக்கப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளரான தன்னை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.! கூடுதலாக 11 பேர் பொறுப்பாளராக நியமனம்- அதிரடியாக களத்தில் இறங்கிய ஈபிஎஸ்

வேட்பு மனு தாக்கல்- கடைசி நாள்

அப்போது, நீதிபதிகள் தேர்தல் எப்போது வேட்பு மனு தாக்கல் செய்யகடைசி நாள் என்ன உள்ளிட்ட விவரங்களை கேட்டு அறிந்ததோடு, இந்த விவகாரம் தொடர்பாக திங்கட்கிழமை முறையிடுவதற்கான விண்ணப்பங்களை சரியாக தாக்கல் செய்து பின்னர் வந்து முறையிடுங்கள் என தெரிவித்தனர். மேலும், வேட்புமனுவுக்கு கடைசி நாளுக்கு முன்பாக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்க முடியுமா என்பதை பார்க்கிறோம். ஒருவேளை அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு தீர்ப்பு தாமதமாகும் பட்சத்தில் ஈ.பி்எஸ் தரப்பின் புதிய கோரிக்கை தொடர்பாக  பரிசீலிக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் வலிமையாக உள்ளது பிஎப்ஐ அமைப்பு..! சர்வதேச பயங்கரவாதிகளோடு தொடர்பு- ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு
 

click me!