நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாமக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அன்புமணி இன்று டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக தொகுதியில் இறுதியான பேச்சுவார்த்தை
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். பாஜக மற்றும் காங்கிரஸ் தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சியுடனான பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்களும், முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் எந்த எந்த தொகுதி என இறுதி செய்யப்படவுள்ளது.
undefined
போட்டி போட்டு கூட்டணி அமைக்கும் அதிமுக, பாஜக
அதே நேரத்தில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக பாஜக கூட்டணியில் நீடித்த அதிமுக தனது கூட்டணியை முறித்துக்கொண்டுள்ளது. இதனையடுத்து இந்த இரண்டு கட்சிகளும் தனித்தனி அணியை உருவாக்க தீவிரமாக முயன்று வருகிறது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, பாரி வேந்தர். சரத்குமார், தேவநாதன் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் பாமகவானது அதிமுக மற்றும் பாஜகவிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது.
பாஜக கூட்டணியில் பாமக
மாநிலங்களவை பதவி, மத்திய அமைச்சர் பதவி என கோரிக்கையை கூறியிருந்தது. இதில் ஒரு கட்டம் வரை அதிமுக தரப்பு பாமகவிடம் பேச்சுவார்த்தையை தொடர்ந்தது. ஒரு கட்டத்திற்கு பிறகு பாமகவின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த காரணத்தில் பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொண்டது. இதனையடுத்து பாமகவின் கோரிக்கைகள் நிறைவேற்றி தர பாஜக தரப்பு ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் 7 தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாமக தலைவர் அன்புமணி இன்று டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து கூட்டணியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்