அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலை வாங்கி தருவதாக மோசடி
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ஏராளனமானவர்களிடம் 1கோடியே 62 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல்வேறு கட்டங்களை கடந்து உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை கடந்த மாதம் 13ஆம் தேதி கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் இருதய பகுதியில் 3 அடைப்பு இருப்பதாகவும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் அறிவுயுறுத்தி இருந்தனர்.
undefined
அமலாக்கத்துறை சம்மன்
இதனையடுத்து தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இருதய பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து புழல் சிறையில் கடந்த வாரம் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். இதற்கிடையே போக்குவரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்யப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாரும் முக்கிய நபராக சேர்க்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த பலமுறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் காலம் தாழ்த்திக் கொண்டு இருந்தார். இதுவரை இந்த வழக்கின் 40 பேருக்கு சமன் அளிக்கப்பட்ட நிலையில் 20 பேர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். இதில் 20 பேர் இன்னும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளனர்.
தேடப்படும் குற்றவாளி.?
தற்பொழுது நான்காவது முறையாக செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த சம்மனை பெற்றுக் கொண்டு அசோக்குமார் வருகிற 27 ஆம் தேதி ஆஜராகாத பட்சத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தனக்கும் நெஞ்சுவலி இருப்பதாக கூறி அதற்காக சிகிச்சை எடுக்க வேண்டி உள்ளதால் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறையிடம் அசோக் குமார் வழக்கறிஞர்கள் கடிதம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்