சனாதனத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளால் ஆட்சியே போனாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர், சனாதனத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று பேசிய கருத்து மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வடமாநிலங்கள் கடந்து பிரதமர் மோடி இது தொடர்பாக தனது கருத்தை வெளியிட்டிருந்தார். அந்த அளவிற்கு சனாதனம் தொடர்பான அமைச்சரின் கருத்து மிகுந்த சர்சையை ஏற்படுத்தியது. இதனிடையே உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் அமைச்சர் உதயநிதியின் தலையை வெட்டுபவர்களுக்கு ரூ.10 கோடி வழங்கப்படும் என்று கூறியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
கடைசி நேரத்தில் ஓடி வந்த விமல்; கதறி அழுத மாரிமுத்துவின் மகன்
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறுகையில், 9 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவையே மாற்றிக் காட்டுவோம் என்று சொன்னார். அதன்படி தற்போது இந்தியா என்ற பெயரை மாற்றி உள்ளார். திமுக என்ற கட்சிய சனாதனத்திற்கு எதிராகவும், சமத்துவத்திற்கு ஆதரவாகவும் தொடங்கப்பட்டது தான். இதற்காக ஆட்சியே போனாலும் எங்களுக்கு கவலை இல்லை.
ஜெயிலர் படம், வெப் சீரிஸ் மாதிரி இதையும் கொஞ்சம் பாருங்க; மாணவர்களுக்கு கனிமொழி அட்வைஸ்
என்னை தொட்டால் ஒருவர் ரூ.10 லட்சம் தருவதாக சொல்கிறார், மற்றொருவர் 10 கோடி தருவதாக சொல்கிறார். நாளுக்கு நாள் எனக்கான டிமேண்ட் அதிகரித்துக்கொண்டே செல்வதை பார்க்கும் போது நகைச்சுவையாக உள்ளது. சனாதனம் குறித்து அம்பேத்கர், பெரியார், அண்ணா பேசாத கருத்துகளை நான் பேசிவிடவில்லை. பாஜகவை நான் கருத்தில் கொள்ளவில்லை. சனாதன விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.