இனியும் பொறுமையாக இருப்பது சரியல்ல.. இது இந்தியாவிற்கே அவமானமில்லையா? கொதிக்கும் டிடிவி. தினகரன்.!

By vinoth kumarFirst Published Jan 24, 2022, 12:18 PM IST
Highlights

ஒரு பக்கம் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்; இன்னொருபுறம் புதிதாக கிளம்பியிருக்கிற இலங்கை கடற்கொள்ளையரின் தாக்குதல் என தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.

தமிழக மீனவர்களிடமிருந்து பிடித்த படகுகளை ஏலம் விட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிட துடிக்கிறது இலங்கை அரசு. இனியும் மத்திய - மாநில அரசுகள் மெத்தனமாக இப்பிரச்சனையைக் கையாள்வது சரியானதுதானா? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பிள்ளார்.

தமிழகத்தில் ராமேஸ்வரம், மண்டபம், நாகப்பட்டினம் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 2010-ம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, காரைநகர், தலைமன்னார் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் 100-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாவட்டம் காரைநகரில் உள்ள 65 படகுகள் பிப்ரவரி 7ம் தேதியும், காங்கேசன் துறையிலுள்ள 5 படகுகள் பிப். 8ம் தேதி, கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சியிலுள்ள 24 படகுகள் பிப். 9ம் தேதி, மன்னார் மாவட்டம் தலைமன்னாரிலுள்ள 9 படகுகள் பிப்ரவரி 10ம் தேதி, புத்தளம் மாவட்டம் கல்பிட்டி துறையிலுள்ள 2 படகுகள் பிப்ரவரி 11ம் தேதியும் ஏலம் விடுவதாக விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை கடற்படையால் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடி விசைப்படகுகள் முதல் முறையாக இலங்கை அரசால் ஏலத்தில் விடப்படும் நடைமுறை துவங்குகிறது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், னவர்களிடமிருந்து பிடித்த படகுகளை ஏலம் விட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிட துடிக்கிறது இலங்கை அரசு அரசு டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அமுமக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஒரு பக்கம் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்; இன்னொருபுறம் புதிதாக கிளம்பியிருக்கிற இலங்கை கடற்கொள்ளையரின் தாக்குதல் என தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.

நம்முடைய மீனவர்களிடமிருந்து பிடித்த படகுகளை ஏலம் விட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிட துடிக்கிறது இலங்கை அரசு. இனியும் மத்திய - மாநில அரசுகள் மெத்தனமாக இப்பிரச்சனையைக் கையாள்வது சரியானதுதானா?

நம்முடைய மீனவர்களிடமிருந்து பிடித்த படகுகளை ஏலம் விட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிட துடிக்கிறது இலங்கை அரசு. இனியும் மத்திய - மாநில அரசுகள் மெத்தனமாக இப்பிரச்சனையைக் கையாள்வது சரியானதுதானா? (2/3)

— TTV Dhinakaran (@TTVDhinakaran)

தமிழக மீனவர்கள் இவ்வாறு தாக்கப்பட்டு வருவது இந்தியாவிற்கே அவமானமில்லையா? இதனை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டிய கடமை  மத்திய அரசுக்கு இருக்கிறது. வெறும் கடிதம் எழுதுவதோடு நிறுத்திவிடாமல் மத்திய அரசை வலியுறுத்தி அதனைச் செய்திட வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என டிடிவி.தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

click me!