மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்து "தங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம். பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களித்தால் நல்லது என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை கிண்டல் செய்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான நிலையில் இருப்பதால் அதன் “முதல்வர் வேட்பாளர்” என்கிற நிலைப்பாட்டை ப்ரியங்கா காந்தி மாற்றிக்கொண்டதாக கூறி இருக்கிறார்.
மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்து "தங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம். பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களித்தால் நல்லது என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
"உத்தரபிரதேசத்தில், காங்கிரஸ் போன்ற கட்சிகள் மக்களின் வாக்குகளை பிரித்து வீணாக்குகிறார்கள் என்று மாயாவதி கூறினார். உத்தரபிரதேசத்தில் கட்சியின் முதல்வர் முகம் தான் இல்லை என்று பிரியங்கா காந்தி தெளிவுபடுத்திய ஒரு நாள் கழித்து, இதனை மாயாவதி தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை, ப்ரியங்கா காந்தி தன்னை காங்கிரஸ் பிரச்சாரத்தின் முகமாக முன்னிறுத்தினார். ஆனால் அது தேர்தலில் போட்டியிடுவதா அல்லது தன்னை முதல்வர் போட்டியாளராக முன்னிறுத்துகிறதா என்பதை வெளிப்படுத்தவில்லை.
“காங்கிரஸ் கட்சியிலிருந்து வேறு எந்த முகத்தையும் பார்க்கிறீர்களா? நீங்கள் எல்லா இடங்களிலும் என் முகத்தைப் பார்க்கிறீர்கள்”என்று கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ப்ரியங்கா பதிலளித்தார்.
ஆனால் அடுத்த நாள் ப்ரியங்கா காந்தி ’உத்தரபிரதேசத்தில் காங்கிரஸின் முதல்வர் முகமாக தாம் இருக்கவில்லை. பத்திரிகையாளர்கள் அதே கேள்வியை அவரிடம் திரும்பத் திரும்பக் கேட்டதால், "எரிச்சலில்" அப்படி தெரிவித்தேன் என அவர் கூறினார்.
காங்கிரஸுக்கு வாக்களிப்பவர்கள் அதனை விடுத்து பாஜகவை வீழ்த்த பி.எஸ்.பி.க்கு சிறந்த இடமுண்டு என்று கூறினார்.
முன்னாள் முதல்வர் மாயாவதி, "கோரக்பூரில் யோகி ஜி அதிக நேரம் வசிக்கும் மடாலயம் ஒரு பெரிய பங்களாவை விட குறைவானது அல்ல என்பது மேற்கு உ.பி. மக்களுக்குத் தெரியாது. இதைப் பற்றி அவர் தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று யோகி ஆதித்யாநாத்தை விமர்சித்து இருந்தார்.
காஜியாபாத்தில் பிரச்சாரம் செய்த ஆதித்யநாத், வாக்காளர் உரையாடல் நிகழ்ச்சியில், மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோரைக் குறிவைத்து, விமர்சித்தார். .
பாஜக அரசு மாநிலத்தில் 2 கோடியே 61 லட்சம் பேருக்கு கழிப்பறைகளை வழங்கியதாகவும் அவர் கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஆதித்யநாத் வசிக்கும் கோரக்பூர் மடமும் பெரிய பங்களாவுக்குக் குறைவில்லை எனத் தெரிவித்தார்.