கோவாவை தட்டி தூக்கும் 'பாஜக'.. காங்கிரஸ், ஆம் ஆத்மியின் நிலைமை என்ன..? வெளியானது கருத்துக்கணிப்பு !

By Raghupati RFirst Published Jan 24, 2022, 11:18 AM IST
Highlights

கோவா மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று புதிய கருத்து கணிப்பு வெளியாகி இருக்கிறது.

40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 14-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகின்றது. தற்போது, ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா, 34 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டு, தேர்தல் களத்தில் முந்திக்கொண்டுள்ளது. முதன்முதலாக கோவா தேர்தலில் களம் காணும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துவிட்டது. இதுபோன்ற சூழலில், கூட்டணி அமைத்து போட்டியிட வருமாறு விடுத்த அழைப்பை காங்கிரஸ் நிராகரித்ததால் திரிணாமுல் காங்கிரஸும் தனித்து போட்டியிடுகிறது.

மகாராஷ்ட்ராவில் பாரதிய ஜனதாவை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்த காங்கிரஸ், அவ்விரு கட்சிகளுடன் கோவாவில் இணைந்து போட்டியிட விரும்பவில்லை. இதனை சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்களே உறுதி செய்துவிட்டனர். ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

இந்த நிலையில் “NewsX-Polstrat” என்ற நிறுவனம் புதிய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பாஜக இந்தமுறை அசால்டாக கைப்பற்றும் என்றும் கூறியுள்ளது. கோவா சட்டசபைக்கு மொத்தமுள்ள 40 இடங்களில் பாஜக 21 முதல் 25 வரையிலான இடங்களை பிடித்தது அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் காங்கிரஸ் 4 முதல் 6 இடங்களையே பெறும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ஆம் ஆத்மி கட்சி 6 முதல் 9 இடங்கள் வரை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. 

மற்றவர்கள் 2 முதல் 5 இடங்களை பிடிக்கும் என்றும் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. . பாஜக 35.6% வாக்குகளையும்,ஆம் ஆத்மி 23.4%, காங்கிரஸ் 20.1% வாக்குகளையும் பெரும் என்று தெரிவித்துள்ளது அந்த சர்வே. ஆம் ஆத்மி கட்சியால் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது காங்கிரஸ்.அதேபோல, கோவா முதல்வர் யாராக இருந்தால் சிறப்பாக  இருக்கும் ? என்ற கேள்விக்கு பிரமோத் சாவந்த் என்று 40% பேரும், காங்கிரசின் திகம்பர் காமத் என்று 30.91% பேரும், மற்றவர்கள் என்று 29.09% பேரும் பதில் கூறியுள்ளனர். முதல்முறையாக கோவாவில் திரிணாமுல் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் களம் காண்கிறது. எனவே கோவாவில் பல முனை போட்டி நிலவுகிறது. எனவே யார் கோவாவில் ஆட்சி அமைப்பார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

click me!