ஒமைக்ரானை அசால்டாக நினைக்காதீங்க.. என் நண்பரே இறந்து விட்டார்.. ராதாகிருஷ்ணன் பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Jan 24, 2022, 11:22 AM IST
Highlights

பல வணிக நிறுவனங்கள், மருந்து நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மாஸ்க் அணியாமல் மெத்தனமாக இருக்கின்றனர் எனக்கு தெரிந்த ஒரு மருந்து கடையில் எனக்கு நன்கு பழக்கப்பட்ட நண்பர் வைரஸ் தோற்றால் இறந்து விட்டார். மக்கள் கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது, அறிவுரை மட்டுமல்ல அபராதமும்  வசூலிக்கப்பட்டு வருகிறது. 

ஒமைக்ரானை வைரஸை மக்கள் அசால்டாக என்ன கூடாது அதிலும் உயிரிழப்பு நடக்கிறது, எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இறந்துவிட்டார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் பணியாற்றும் ஒவ்வொரு செவிலியர்களும் மருத்துவர்களும் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். தயவுசெய்து மக்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் முழுமையாக இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையிலும், மனித சமூகத்தை வாட்டி வதைத்து வருகிறது. பெரும்பாலும் அனைத்து உலக நாடுகளும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான மக்கள் கொத்துக்கொத்தாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அதில் பல லட்சம் பேர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் உருமாறிய வைரஸ்  ஒட்டு மொத்த உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பிரிட்டன், அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வேகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 80% மக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட பின்னரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இமை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரையில் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு என கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில்  ஒமைக்ரான் சமூக பரவலாக மாறிவிட்டதாக அனைத்து மெட்ரோ நகரங்களிலும் அதிவேகமாக பரவி வருகிறது என்றும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்து வருகிறது என்றும் மத்திய சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இன்சாககாக் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. டெல்லி மும்பை போன்ற நகரங்களில் இது வேகமாக பரவுகிறது என்றும், வெளிநாட்டு மக்கள் அல்லாமல் உள் நாட்டு மக்கள் மூலமாகவே ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவும் நிலை ஏற்பட்டு விட்டது, இந்த வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலோருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை, பலர் சிறிய அறிகுறிகளுடன் உள்ளனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனாவில் வேகமும் குறைந்துள்ளதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

கடந்த முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் பெரிய அளவில் மருத்துவ படுக்கைகள் தேவைப்பட்டன, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது ஒமைக்ரான் பெரும்பாலோனோருக்கு அறிகுறி இல்லை என்றும் கூறப்பட்டாலும் தற்போது தொற்று வேகமெடுக்க தொடங்கியுள்ளது, மீண்டும் பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் என சுகாதாரத் துறை வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன்  ஒமைக்ரானை  மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது, அது மிகவும் மோசமான ஆபத்துகளை விளைவிக்க கூடியது என எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் முழு விவரம் பின்வருமாறு:- 

கொரோனா தொற்றின் ஏற்றும் விகிதம் சற்று குறையத் தொடங்கியுள்ளது அது சற்று ஆறுதல் தரக்கூடிய விஷயம், அதே நேரத்தில் எண்ணிக்கை என்பது 30,000 என்ற அளவில் உள்ளது அது கவலை தரக்கூடிய விஷயம், கேரளா மற்றும் பெங்களூர் எல்லைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதை சுகாதாரத்துறை முறையாக கண்காணித்து வருகிறது. பொதுமக்களுக்கு புரிய வேண்டிய விஷயம் என்னவென்றால் சிலர் ஒமைக்ரான் மிகவும் சாதாரணமானது அது சாதாரணமாக சளி காய்ச்சல் போன்றதுதான்  என்றும், கவலைப்படத் தேவையில்லை என்றும் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் விஷயம் அப்படியல்ல, ஒமைக்ரானுடன்10 சதவீதம் பேருக்கு டெல்டாவும் பரவிவருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ள செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள்  முன்வைக்கும் ஒரே கோரிக்கை என்னவென்றால், நாங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக முழு கவச உடை அணிந்து மிகவும் கடினமான சூழ்நிலையில் பணியாற்றி வருகிறோம், எனவே நாங்கள் கேட்டுக் கொள்வது என்னவென்றால், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வலியுறுத்துங்கள் இதைத் தாண்டி நாங்கள் வேறு என்ன கேட்கிறோம் என கூறுகின்றனர்.

அதேபோல பல வணிக நிறுவனங்கள், மருந்து நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மாஸ்க் அணியாமல் மெத்தனமாக இருக்கின்றனர் எனக்கு தெரிந்த ஒரு மருந்து கடையில் எனக்கு நன்கு பழக்கப்பட்ட நண்பர் வைரஸ் தோற்றால் இறந்து விட்டார். மக்கள் கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது, அறிவுரை மட்டுமல்ல அபராதமும்  வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 108 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் என்ன செய்வது? தயவுசெய்துஇந்த நுண்கிருமி எப்படி பரவுகிறது என்பது பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஹோட்டலுக்கு குடும்பமாக செல்வது, ஒரே மேசையில் குடும்பமாக அமர முயற்சிப்பது இது போன்ற விஷயங்களை எல்லாம் தவிர்த்து வழி முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இங்கிலாந்து போன்ற நாடுகளில் வழிமுறை பின்பற்றப்பட்டதினால்தான் நோய்த்தொற்று குறைவாக உள்ளது. உயிரிழப்பும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

60 சதவீதம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருப்பதனால்தான் வைரஸ் பரவல்  கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை போன்ற நகரங்களில் வைரஸ் ஒரு தட்டையான நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில மண்டலங்களில் வைரஸ் குறைந்திருந்தாலும் சில மண்டலங்களில் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அனைவரும் நோய் தடுப்பு வழி முறைகளைப் பின்பற்ற வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

click me!