கொரோனா நெருக்கடியில் இப்படி ஒரு நடவடிக்கையா: தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திர பாபு அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Sep 9, 2020, 2:55 PM IST
Highlights

இந்த ஆலோசனை முகாமில் 800 காவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். முதற்கட்டமாக சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலோசனை முகாம் வரும் நாட்களில் காவலர்களின் தேவைக்கேற்ப தமிழகம் முழுவதும் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். 

மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் தீயணைப்புதுறை அலுவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் மனநல ஆலோசனை முகாம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் முதல் தீயணைப்பு வீரர்கள் வரை அனைவருக்கும் குடும்பம் மற்றும் அலுவல் சார்ந்த பிரச்சனைகளால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் விதமாக, மன நல மருத்துவர்களை கொண்ட ஆலோசனை முகாம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. 

இந்த ஆலோசனை முகாமினை சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்புதுறை அலுவலகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் திரு சி.சைலேந்திர பாபு கலந்துகொண்டு திறந்து வைத்தார். ஒரு மாத காலம் நடைபெறும் இந்த ஆலோசனை முகாமில் 800 காவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். முதற்கட்டமாக சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலோசனை முகாம் வரும் நாட்களில் காவலர்களின் தேவைக்கேற்ப தமிழகம் முழுவதும் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். 

தற்போது கொரோனா போன்ற பேரிடர்காலத்தில் தன் குடும்பங்களை பிரிந்து தொடர் மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களின் மன அழுத்தத்தை போக்க இம்மாதிரியான ஆலோசனை முகாம் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என காவல் உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!