திருட்டு மணலை மலை மலையாய் பதுக்கிய உடன்பிறப்பு... வசமாக சிக்கிய திமுக ஒன்றிய செயலாளர்..!

Published : Sep 09, 2020, 01:31 PM ISTUpdated : Sep 09, 2020, 02:05 PM IST
திருட்டு மணலை மலை மலையாய் பதுக்கிய உடன்பிறப்பு... வசமாக சிக்கிய திமுக ஒன்றிய செயலாளர்..!

சுருக்கம்

திமுக ஆட்சியில் இல்லாதபோதே திருட்டு மணல், மண் கடத்தி கல்லா கட்ட நினைக்கும் இவர்களை போன்றவர்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் இன்னும் என்னவெல்லாம் திருடுவார்களோ என அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

மரங்களை சட்டவிரோதமாக வெட்டி கடத்தியதற்காக திமுக ஒன்றிய செயலாளருக்கு சொந்தமான இடத்தில் நடந்த  சோதனையில் ஆற்று மணலையும் மலை மலையாய் பதுக்கிய விவகாரமும் அம்பலத்திற்கு வந்துள்ளது. ஓசி பிரியாணி, ஓசி தேங்காய், ரீசார்ஜ், கடப்பா கல்லை தொடர்ந்து இப்போது திருட்டு மணலும் மரமும் இணைந்துள்ளது.

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகவடிவேலு மீது மணலை பதுக்கியதாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏலத்தில் அனுமதித்ததை விட அதிகமான மரங்கள் வெட்டப்பட்டு கண்டரமாணிக்கம் ரோட்டில் உள்ள தோட்டத்தில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தாசில்தார் ஜெயலட்சுமி அங்கு சோதனை நடத்தினார். அங்கு 50 டிப்பர் லாரி மணல், 450 டிப்பர் லாரி சவடு மண் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் திமுக ஒன்றிய செயலாளரும், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவருமான சண்முகவடிவேலுக்கு சொந்தமான தோட்டம் எனத் தெரிய வந்தது. 

                                                               வட்டத்திற்குள் சண்முகவடிவேல்

இதனையடுத்து சண்முகவடிவேலு மீது தாசில்தார் ஜெயலட்சுமி திருக்கோஷ்டியூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். திருக்கோஷ்டியூர் காவல்துறையினர், அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படும் வகையில் லாப நோக்கத்துடன் விற்பனைக்காக மணல், சவடு மண் பதுக்கி வைத்திருந்ததாக சண்முகவடிவேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  ஜாமினில் வெளிவரமுடியாத வழக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் காவல்துறையினர் தலைமறைவாக உள்ள சண்முகவடிவேலுவை வலைவீசித் தேடி வருகின்றனர். திமுக ஆட்சியில் இல்லாதபோதே திருட்டு மணல், மண் கடத்தி கல்லா கட்ட நினைக்கும் இவர்களை போன்றவர்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் இன்னும் என்னவெல்லாம் திருடுவார்களோ என அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

PREV
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!