அமுதா ஐ.ஏ.எஸை வைத்து இப்படியொரு திட்டமா..? திமுகவினரின் தூக்கத்தை கெடுத்த மோடி..!

By Thiraviaraj RMFirst Published Jul 21, 2020, 4:37 PM IST
Highlights

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் தமிழகத்தில் நடைபெறும் சில அதிரடி மாற்றங்கள் திமுகவை நிலைகுலையச் செய்துள்ளன. 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் தமிழகத்தில் நடைபெறும் சில அதிரடி மாற்றங்கள் திமுகவை நிலைகுலையச் செய்துள்ளன. 

கொரோனா காரணமாக ஒருவேளை சட்டமன்ற தேர்தலில் தள்ளிப்போகலாம். ஆளுனர் ஆட்சி மாநிலத்தில் ஆறு மாதம் முதல் ஒரு வருட காலத்திற்கு இருக்கும் என்று கூறப்படும் நிலையில், தற்போது மூன்று முக்கிய மாற்றங்கள் திமுகவையும் அதன் பிரச்சார வியூகம் வகுக்கும் அமைப்பையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளன. தமிழகத்தில் நீண்டகாலம் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது பூர்வீகம் மதுரை. 1994ஆம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சியை முடித்தவர். திறமையானவர் என்று அதிமுக- திமுக என இரண்டு கட்சி ஆட்சியாளர்கள் இடையே பெயரெடுத்தவர். இது ஒருபுறமிருக்க திமுக அதிர்ச்சியடைய முக்கியக் மூன்று காரணங்கள் உள்ளன. அதில் அமுதாவும் ஒருவர். கருணாநிதி மறைந்தபோது அவரது இறுதிச் சடங்கை கவனித்தவர் அமுதா. 2021 தேர்தலை சந்திக்க பிரசாந்த் கிஷோரிடம் ஒப்பந்தம் செய்து திமுக. அதன் பிறகு தமிழகத்தில் முன்னணி ஊடகங்கள் கொண்டு தங்களுக்கு சாதகமான செய்திகளை வெளியிடுவதாக கூறப்பட்டது.

 கடந்த தேர்தலில் திமுக, பாஜக ஒரு மதவாத கட்சி என்ற பிரச்சாரத்தை  முன்வைத்தது. அதே பார்முலாவை வைத்து திமுகவில் தேர்தலில் வீழ்த்த பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. இதன் முக்கிய எதிரொலிதான் அமுதா ஐஏஎஸ். பிரதமர் இணைச் செயலாளராக பிரதமர் அலுவலகம் நியமித்தது தமிழகம் குறித்து அனைத்து விபரங்களையும் அறியத்தான் என திமுக சந்தேகிக்கிறது. 

இனிவரும் நாட்கள் ஒவ்வொன்றும் மேற்கு வங்கத்தில் ஒரே வருடத்தில் இந்த எழுச்சி போல் பல அதிரடி மாற்றங்கள் தமிழகத்தில் அரங்கேறும் என்கிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் மோடியின் அரசியல் வியூகம் தமிழகத்தில் ஆரம்பமாகும் என கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து மோடி தமிழக அரசியலில் கவனம் செலுத்துவதும், தமிழகத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் பிரதமர் அலுவலகத்தில் நியமனம் செய்யப்படுவதும் ஸ்டாலின் தூக்கத்தை மட்டுமல்ல திமுக முக்கியப்புள்ளிகளின் தூக்கத்தை கெடுத்துள்ளன. 

click me!