
லஞ்சம், ஊழலை ஒழிக்கின்ற மோடி மீதான வெறுப்பு, பாஜக மீதான எதிர்ப்பு வன்மத்தை, விஷத்தை கக்கும் சில தீய சக்திகளை, இந்தியாவை சிறுமைப்படுத்தி பேச வைக்கின்றன என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- எட்டாயிரத்துக்கும் அதிகமான கோடீஸ்வரர்கள் அல்லது அதிக நிகர மதிப்பு உள்ள தனிநபர்கள் இந்தியாவை விட்டு இந்த வருடம் வெளியேறுகின்றனர் என்று ஹென்றி குளோபல் சிட்டிஸன்ஸ் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது என்று சில ஆங்கில மற்றும் தமிழ் ஊடகங்கள் தலைப்பு செய்தி வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்து கொண்டுள்ளன. இந்த தலைப்பை பார்த்து ஒரு சில யூ -டியூப் அறிவாளிகள் மற்றும் சில எதிர்க்கட்சியினர் "ஐயோ! இந்தியாவை விட்டு பணக்காரர்கள் வெளியேறுகின்றனர்.
இதையும் படிங்க;- திமுகவின் ஊழலை அண்ணாமலை உடனே கண்டுபிடித்து தடுத்து விடுகிறார்.. உச்சிக்குளிரும் எச். ராஜா!
இது நாட்டுக்கு ஆபத்து என்றும், பல்வேறு மத, சாதிய மோதல்கள் மற்றும் நிர்வாகமின்மை தான் காரணம் என்றும் வன்மம் மிக்க கருத்துகளை பரப்பி, மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி இந்தியாவின் பெருமையை சீர்குலைக்கும் விதமாக சித்தரித்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உண்மையில், அந்த ஆய்வறிக்கையில், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிலிருந்தும் அதிக அளவில் தனி நபர்கள் வெளியேறுகிறார்கள் என்றும், இந்தியாவிலிருந்து எட்டாயிரம் பேர் வெளியேறுவது பெரிதல்ல என்றும், இந்தியா மிக பெரிய வளரும் நாடாக விளங்க போகிறது என்றும், வெளியேறும் நபர்களை விட பன்மடங்கு கோடீஸ்வரர்களை இந்தியா ஒவ்வொரு ஆண்டும் உருவாக்குகிறது என்றும், தற்போது உள்ள நிலையினை விட இந்தியாவின் கட்டமைப்பு திட்டங்களால் 2031ல் 80 விழுக்காடு (%) அதிக கோடீஸ்வரர்கள் இந்தியாவில் பெருகுவார்கள் என்றும், அமெரிக்காவில் 20 விழுக்காடு முன்னேற்றமே இருக்கும், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் 10 விழுக்காடு முன்னேற்றமே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
நிதி துறை, சுகாதார துறை மற்றும் தொழில் நுட்ப துறையில் சிறந்து விளங்குவதோடு, பொருளாதார ரீதியாக வேகமாக வளரும் நாடாக இந்தியா விளங்கும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெளிவுபடுத்துகிறது. இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்தால், பெரும்பான்மையானோர் இந்தியாவில் உள்ள பல்வேறு தனிநபர் வருமான வரி மற்றும் விசா விதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை முன்னிட்டே வெளியேறுவதாக ஆய்வறிக்கை சுட்டி காட்டுகிறது. ஒருவேளை, விசா விதிகளை தளர்த்தினாலோ, தனி நபர் வருமானத்தை தளர்த்தினாலோ "அய்யகோ, பெரும் பணக்கார்களுக்கு சலுகைகளை அள்ளி தருகிறது பாஜக அரசு" என்ற விமர்சனத்தை வைக்க தயங்கமாட்டார்கள் இந்த விவகாரத்தை பூதாகரமாக சித்தரிப்பவர்கள்.
லஞ்சம், ஊழலை ஒழிக்கின்ற மோடி மீதான வெறுப்பு, பாஜக மீதான எதிர்ப்பு வன்மத்தை, விஷத்தை கக்கும் சில தீய சக்திகளை, இந்தியாவை சிறுமைப்படுத்தி பேச வைக்கின்றன. மிக சிறந்த பொருளாதாரத்தை அடையப்போகும் இந்தியா குறித்த ஆய்வறிக்கையிலிருந்து ஒரு சில வரிகளை மட்டும் எடுத்து கொண்டு இந்தியாவை சிறுமைபடுத்தும் சிறுமதி கொண்டவர்களை புறந்தள்ளுவோம். மக்கள் தீய சக்திகளை அடையாளம் கண்டு கொள்ளும் அதே நேரம், நரேந்திர தாமோதர தாஸ் மோடி அவர்களின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில், இந்தியா பொருளாதாரத்தில் உலகத்திலேயே மிக பெரிய சக்திவாய்ந்த நாடாக உயரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- இந்து வெறுப்பு கொண்ட திமுக.. உண்மை முகத்தை வெளிப்படுத்திய 'முரசொலி'... போட்டு தாக்கும் வானதி சீனிவாசன்.!