ஜெயலலிதா இருந்த பதவின்னா யாரும் அமரக் கூடாதா.?? அட போங்கப்பா.. அம்மாவையே அசால்டா பேசிய அன்பழகன்.

Published : Jun 21, 2022, 12:30 PM IST
 ஜெயலலிதா இருந்த பதவின்னா யாரும் அமரக் கூடாதா.?? அட போங்கப்பா.. அம்மாவையே அசால்டா பேசிய அன்பழகன்.

சுருக்கம்

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி தான்  சரியான நபர் அவரால்தான் திமுகவை தைரியமாக எதிர்க்க முடியும் என புதுச்சேரி கிழக்கு அதிமுக மாநில செயலாளர் அன்பர்கள் தெரிவித்துள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி தான்  சரியான நபர் அவரால்தான் திமுகவை தைரியமாக எதிர்க்க முடியும் என புதுச்சேரி கிழக்கு அதிமுக மாநில செயலாளர் அன்பர்கள் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா  வகித்த பதவி என்பதால் அதில் யாரும் அமரக்கூடாது என கூறுவது முட்டாள்தனம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா என முழங்கிய அதிமுக தொண்டர்கள் அவரது மறைவுக்கு பின்னர் இப்படி பேசி வருவது ஜெ.பக்தர்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையின்கீழ் அதிமுக இயங்கி வருகிறது. இரட்டைக் தலைமையின் கீழ் அக்கட்சி சந்தித்த தேர்தல்கள் அனைத்திலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. எனவே கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் இருந்து வருகிறது. தற்போது அதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனர். எதிர்வரும் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான வேலைகளில்  அவரின் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இது ஓ. பன்னீர் செல்வத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்குழுவை நடத்த கூடாது அதை ஒத்தி வைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் என பழனிசாமி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியிலெ செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி பிறகு அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்,  எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-  சமீபத்தில் அதிமுக  சார்பில் ராஜசபா பதவிக்கு இரண்டு பேரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது, ஆனால் இரட்டை தலைமை காரணமாக தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி ஏற்பட்டு அவசிமற்ற கால தாமதம் ஏற்பட்டது. ஆனால் ஒத்த தலைமையில் இருந்தால் இது போன்ற விஷயங்களில் வேகமாக முடிவெடுக்க முடியும், அதற்காகத்தான் ஒற்றைத் தலைமை வேண்டும் என நாங்கள் கூறுகிறோம் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் யார் தடை உத்தரவு போட்டாலும் அவர்கள் அதிமுகவுக்கு எதிரானவர்கள்.

அவர்கள் கட்சியில் இருந்து விளக்க படவேண்டியவர்கள், அவர்கள் திமுகவின் B டீம், பொதுச்செயலாளர் பதவியில் ஜெயலலிதா இருந்தார் என்பதற்காக அந்த பதவியில் யாரும் அமரக்கூடாது என கூறுவது முட்டாள்தனம், கேலிக்கூத்தானது, ஜெயலலிதா முதல்வர் பதவியை கூடத்தான் வகித்தார் அதற்காக யாரும் முதல்வர் பதவி  வகிக்காமல் இருக்க முடியுமா? பொதுச் செயலாளர் பதிவு என்பது இப்போது கட்சிக்கு அவசியம், பொதுச்செயலாளர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் எடப்பாடி பழனிசாமி தான், அவர்தான் திமுகவை துணிச்சலாக எதிர்ப்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!