EPS Vs OPS : எல்லாமே ரெடி.! அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? அதிர்ச்சியில் ஓபிஎஸ் வட்டாரம்

Published : Jun 21, 2022, 12:24 PM IST
EPS Vs OPS : எல்லாமே ரெடி.! அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? அதிர்ச்சியில் ஓபிஎஸ் வட்டாரம்

சுருக்கம்

EPS Vs OPS : கட்சியின் புதிய உயர் பதவியாக ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டு அது ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கும் வழங்கப்பட்டன.

எடப்பாடி பழனிசாமி Vs பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிகாலம் நிறைவடைந்து திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வானார். இருப்பினும் அவ்வப்போது எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்புகளுக்கு இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்துக்கு வருவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க மாவட்டச் செயலாளார்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது. அப்போது ஒற்றைத் தலைமை குறித்த விவாதிக்கப்பட்டது. 

கூட்டத்திற்கு உள்ளேயே ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம் செய்துகொண்டனர். இந்நிலையில், பொதுக்குழுவுக்கான தீர்மானத்தை இறுதிசெய்யும் குழுவின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான தனித் தீர்மானம் இறுதிசெய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இன்றைய கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : 2024 தேர்தல்.. தமிழ்நாட்டுல இருந்து 25 எம்பிக்கள்.. இதுதான் டார்கெட்! திமுகவை அட்டாக் செய்யும் அண்ணாமலை

அதிமுக பொதுக்குழு கூட்டம்

இதனிடையே, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கை முன் கூட்டி விசாரிக்க வேண்டும் என்று, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், திண்டுக்கலை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்தார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றால் கலவரம் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சூரியமூர்த்தி அதிமுகவை சேர்ந்தவரே இல்லை எனவும், அவரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தை நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தது. 

இதையடுத்து, அனைத்து மனுதாரர்களும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்தது. பொதுக் குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் அதை நடத்தியே தீர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு ஓபிஎஸ் தரப்பினர் என்ன செய்வர் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த 7 நாட்களுக்கு பிறகு அதிமுக ஐடி விங் கூட்டம் ஒன்றில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு பேசியிருந்தார்.அதிமுகவை வீழ்த்த சிலர் முயற்சி செய்வதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக வீழ்ந்ததாக சரித்திரமே இல்லை. 

எடப்பாடியின் மாஸ்டர் பிளான்

கட்சியை நாம் காப்பாற்றுவோம். அதிமுகவின் நல்ல எதிர்காலத்தை உறுதி செய்ய உங்களுடன் பாடுபடுவேன் என கூறியிருந்தார். அதிமுகவில் ஒற்றை தலைமை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று தீர்மானத்தை வரைவு  செய்ய இருக்கிறார்கள் என்று தகவல். அதிமுகவில் தற்போது இரட்டை தலைமை இருப்பதால்தான்  கட்சிக்கு வெளியில் இருந்து கொண்டு அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று சொல்லி வருகிறார் சசிகலா.   எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆகிவிட்டால் சசிகலாவிற்கு இனி அந்த வாய்ப்பு இல்லவே இல்லை. அதேசமயத்தில் ஓபிஎஸ்க்கும் அதிமுகவில் சேர வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்று நினைக்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு. 

இதையும் படிங்க : அதிமுக விவகாரத்தில் ஸ்டாலின் தலையிட வேண்டும்.. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்ட புது குண்டு!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!
இந்த திமுகவை நம்பாதீங்க..! மக்களை நம்ப வைச்சு ஏமாற்றுவதுதான் அவங்க வேலையே..! விஜய் எச்சரிக்கை..!