அரசுக்கு எதிராக செம்ம தில்லா ட்வீட் போட்ட ரீல் கோமளவள்ளி... என்னன்னு தெரியுமா?

By sathish kFirst Published Nov 9, 2018, 2:39 PM IST
Highlights

சர்கார் படத்தில் வரும் சில காட்சிகளுக்கு அதிமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவற்றை நீக்க வைத்துள்ளது திரைவுலகினரும் விஜய் ரசிகர்களும் கடும் கோபத்தில் உள்ளனர்.

விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியாகி திரையில் ஓடிக்கொண்டிருக்கும் சர்கார் படத்திற்கு எதிராக ஆளும் அதிமுக தரப்பில்  எதிர்ப்பு கிளம்பியதால் மீண்டும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.  

இந்த படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான   கோமளவள்ளி என்ற பெயரை இப்படத்தில் வில்லியான வரலட்சுமிக்கு வைத்துள்ளனர். பெரும் சர்ச்சைக்குப் பின் அந்த பெயரை தற்போது  மியூட் செய்ய வைத்துள்ளனர். அதேபோல அரசியல் கட்சியினர் அளித்த இலவச பொருட்களை தீயில் போடும் காட்சியும் நீக்கப்பட்டுள்ளது.

Is the government honestly that weak that you are threatened by a movie..?! You’re jus making it worse for yourselves n doing exactly what u r not supposed to do.. please refrain from such stupidity.. it’s freedom of creativity.. pic.twitter.com/mGywqznkm1

— varu sarathkumar (@varusarath)

இந்நிலையில் இது குறித்து வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஒரு படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கா அரசு வீக்காக உள்ளது? எதை நீங்கள் செய்யக் கூடாதோ அதை செய்து உங்களின் நிலையை மோசமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். #vandalising இது போன்ற முட்டாள்தனத்தை செய்வதை தவிர்க்கவும். இது கற்பனை சுதந்திரம் #ISupportARMurugadoss #SarkarVsTNSarkar இவ்வாறு தனது பதிவில் கூறியுள்ளார்.

click me!