டெல்லிக்கு "ஷாக்" வைத்த சந்திர பாபு நாயுடு..! இப்படியொரு "திட்டத்தை" போட்டு மடக்கிட்டாரே..!

By thenmozhi gFirst Published Nov 9, 2018, 12:38 PM IST
Highlights

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பிஜேபி உடன் கூட்டணி வைத்திருக்கும் போது, ஆமாம் சாமி  போட்டவர், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க காலம் தாமதம் மற்றும் அதற்கான வாய்ப்பே குறைவு என தெரிந்துக் கொண்ட பின்னர், பிஜேபி - யில் இருந்து விலகிக்கொண்டார்.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பிஜேபி உடன் கூட்டணி வைத்திருக்கும் போது, ஆமாம் சாமி  போட்டவர், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க காலம் தாமதம் மற்றும் அதற்கான வாய்ப்பே குறைவு என தெரிந்துக் கொண்ட பின்னர், பிஜேபி - யில் இருந்து விலகிக்கொண்டார்.

அதன் பின், ஒவ்வொரு நாளும் எப்படி மத்தியில் ஆளும் பாஜக வை எதிர்க்க முடியும் என பக்காவா ப்ளான்  போட்டவர், தற்போது தென் மாநிலங்களை கையில் எடுத்து வருகிறார்.அதாவது தானே முந்திக் கொண்டு பாஜக விற்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டும் பணியில் இறங்கி உள்ளார் சந்திர பாபு நாயுடு.

அதன் முன்னோட்டமாக தான், நேற்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் அவருடைய தந்தையை  தேவகவுடா வை சந்தித்தார். அதனை தொடர்ந்து இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திர பாபு நாயுடு. காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் என்று பல கட்சி தலைவர்களை நேரில் சென்று பார்த்து வருகிறார் சந்திர பாபு நாயுடு.

இதற்கிடையில் சந்திர பாபு  நாயுடுவிற்கு  பச்சை கொடி காட்ட தயாராகும் விதமாக, இன்று  மாலை நடைபெற  உள்ள இருவரின் சந்திபிருக்கு  முன்னதாகவே, நேற்று  பெரம்பலூரில் நடைப்பெற்ற மாபெரும்  கண்டன கோட்டத்தில் பேசிய  திமுக  தலைவர்  ஸ்டாலின்  "சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து இருப்பதாக தெரிவித்து இருந்தார். ஆக மொத்தத்தில், எதிர்கட்சிகளை பாஜகவிற்கு எதிராக ஒன்றுதிரட்டிவிட்டார் நாயுடு 

அதன் படி, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, இரண்டு இடதுசாரி கட்சிகள், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, முஸ்லீம் லீக், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் என்று மாநிலத்தில் உள்ள பல முக்கிய  கட்சிகளை தன் கூட்டணிக்கு தயார் செய்து வைத்து விட்டார் சந்திர பாபு நாயுடு.

சந்திர பாபு நாயுடுவின் இந்த அதிரடி திட்டம் பாஜக வின்  கவனத்தை ஈர்த்து உள்ளது. இருந்தாலும், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதில் ஆணித்தரமாக உள்ளனர்  பாஜகவினர். தமிழகத்தில் மரலருகிறதோ இல்லையோ, வட இந்தியாவில் முழுமையாக மலர்ந்து விட்டதால் அதுவே பெரிய சக்திதான் என கம்பீர நடைப்போட்டு வருகின்றனர் பாஜகவினர்.

click me!